India vs England, 5th Test, Dharamsala: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது.
இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வருகிற 7 ஆம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் இந்திய அணி தனது முதல் பயிற்சி அமர்வை நடத்தவுள்ளது.
தர்மசாலா ஆடுகளம் எப்படி?
தர்மசாலா ஸ்டேடியத்தில் நடுவில் உள்ள ஆடுகளம் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. பருவமழை பெய்யாததால், கடந்த சில நாட்களாக மைதான ஊழியர்கள் வேலைகளைச் செய்வதைத் தடுத்தது. ஆனால், நேற்று திங்களன்று தெளிவான வானிலை காணப்பட்டதால், கியூரேட்டர்கள் ஆடுகளம் தயாரிக்கும் பணியைத் தொடங்கினர்.
அடுத்த சில நாட்களில், கியூரேட்டர்கள், இந்திய அணி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, எந்த வகையான ஆடுகளத்தை வழங்குவது என்பதை முடிவு செய்வார்கள். ஆனால், தர்மசாலாவில் இங்கிலாந்துக்கு மீண்டும் ஸ்லோ டர்னரை (மெதுவான ஆடுகளம்) எதிர்கொள்ளும் என்று தெரிகிறது.
இந்திய அணி நிர்வாகம் எந்த வகையான ஆடுகளம் அதன் பலத்துடன் ஏற்றது என்பதை உணர்ந்துள்ளது. எனவே, ஏற்கனவே முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட ஃபார்முலாவில் தொடரவே ஆர்வமாக உள்ளது. அதனால், ஸ்பின்னர்களை அணி நிர்வாகம் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பருவமழை பெய்யாததால் மைதானத்தின் அவுட்ஃபீல்ட் சற்று ஈரமாகி, இப்போது தரை முழுவதும் கம்பளம் விரித்தது போல் தெரிகிறது. ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் (HPCA) மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை கைவிட வேண்டியிருந்தது, ஏனெனில் அவுட்ஃபீல்ட் தயாராக இல்லை, மேலும் இந்திய வாரியம் கடைசி நேரத்தில் ஆட்டத்தை இந்தூருக்கு மாற்ற வேண்டியிருந்தது.
இருப்பினும், அதன்பிறகு, இந்த இங்கு கடந்த ஆண்டு பல 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளை நடத்தியது.அவுட்ஃபீல்ட் மீது எந்த விமர்சனத்தையும் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அவர்கள் சில ரஞ்சி டிராபி விளையாட்டுகளையும் நடத்தி இருந்தனர்.
ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் இந்தத் தொடரின் இறுதிப் போட்டியை பிரமாண்டமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றிருந்தாலும், இந்த விளையாட்டுக்காக 5,000க்கும் அதிகமான இங்கிலாந்து ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறது.
இதற்கிடையில், ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கான போட்டோ ஷூட் நேற்று நடந்தது. இதில், இந்திய அணி வீரர்களும், டெஸ்ட் அணியில் இடம் பெறாத ரின்கு சிங் போன்ற வீரர்களும் தரம்சாலாவுக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டு, மைதானத்தில் போஸ் கொடுத்து போட்டோஸ் எடுத்துக் கொண்டனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India versus England: Another slow turner likely for fifth Test at Dharamsala
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“