India vs Afghanistan: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் 5 ஓவரில் விக்கெட் இழப்பு இன்றி 25 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 14.2 ஓவர் முடிவில் 96 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்மத்துலா 26 ரன்னிலும். முகம்மது நபி 20 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில். இந்தியாவிற்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான அணி 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்களுக்கு ஐந்து விக்கெட்களை இழந்தது.
159 ரண்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அடுத்து களம் காண்கிறது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் ரகுவனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸட்ரான் ஆகியோர் முறையே 23 மற்றும் 25 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து இறங்கிய உமர்ஷசாய் 29 ரன்கள் எடுத்திருந்தார். முகமது நபி இரண்டு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் விளாசி இருந்தார்.இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் இரண்டு விக்கெட்டுகளும் அக்ஸர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர். சிவம் துபே ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
ஹர்ஷித் சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸோனி ஆகியோர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில் ரோகித் சர்மா ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து திலக் வர்மா களமிறங்கினார். திலக் வர்மா, சுப்பன் கில் ஜோடி நிதானமாக அதே நேரம் அடித்து ஆடியது.
ஐந்து பௌண்டரிகள் அடித்த சுப்மன் கில் 23 ரன்னில் அவுட் ஆனார். திலக் வர்மாவும் தனது பங்குக்கு 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். சிவம் துபே, ஜிதேஷ் சர்மா களத்தில் உள்ளனர். 10 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் இந்தியா எடுத்துள்ளது.
இந்த நிலையில் ஜிதேஷ் சர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்தார். துபே 40 ரன்னுடன் களத்தில் உள்ளார். இந்தியாவின் வெற்றிக்கு 34 பந்துகளில் 34 ரன்கள் தேவை. கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளன.
இந்த நிலையில் 18வது ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஷிவம் துபே அரை சதம் விளாசினார். அவர் 39 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்தார். மறுபுறம் ரிங்கு சிங் 16 ரன்கள் எடுத்திருந்தார்.
கடந்த டி20 உலகக் கோப்பையில் இருந்து இந்திய அணி மொத்தம் 25 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 16ல் வெற்றி பெற்றுள்ளனர். அணியில் உள்ள பெரிய மாற்றங்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அணிக்கு திரும்புவது பார்க்கப்படுகிறது. இருவரும் 2022 இல் ஆஸ்திரேலியாவில் நடந்த டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு முதல் முறையாக இந்த ஃபார்மெட்டில் விளையாடி இருந்தார்கள்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Afghanistan Live Score, 1st T20
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“