India vs Afghanistan 2018 Test Schedule, Squad, Time Table, Players: Ind vs Afg Test Match Full Schedule
India vs Afghanistan 2018 Test Match Schedule, Squad, Time Table: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா இன்று மோதும் டெஸ்ட் போட்டி, இந்தியாவில் நடைபெறும் 265வது டெஸ்ட் போட்டியாகும். இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது என்று கேட்டு விட முடியாது. ஏனெனில்,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுக்கப்பட்டதை அடுத்து, அந்த அணி முதன் முதலாக இந்திய அணியுடன் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்க அதிக ஆர்வம் காட்டியது பிசிசிஐ. மேலும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அவர்களின் கிரிக்கெட் பாதைக்கு மிகப்பெரிய ஆதரவாகவும் பிசிசிஐ இருக்கிறது. இதனால், இந்தியாவுடனே நாங்கள் எங்களது வரலாற்று சிறப்பு வாய்ந்த முதல் டெஸ்ட் போட்டியை விளையாட விரும்புகிறோம் என ஆப்கானிஸ்தான் விருப்பம் தெரிவித்ததால், இந்தியாவுடன் அவர்கள் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (ஜூன் 14) பெங்களூருவில் நடைபெறுகிறது.
இந்திய அணி வீரர்கள் முழு விவரம்:
அஜின்க்யா ரஹானே (கேப்டன்), ஷிகர் தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல், சத்தீஸ்வர் புஜாரா, கருண் நாயர், ரிதிமான் சாஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ஷர்மா, நவ்தீப் சைனி.
முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால், அவர் வீரர்களின் உடற்தகுதியை நிரூபிக்கும் யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி முதன் முதலாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் விவரம்:
மொஹம்மத் ஷாசத் (வி.கீ), அஷ்கர் ஸ்டைனிக்சை(கேப்டன்), ஜாவேத் அஹ்மதி, ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷஹிதி, நசீர் ஜமால், மொஹம்மத் நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், யாமின் அஹ்மத்சாய், சாயத் ஷிர்சாத், வஃபாதர், ஜாஹிர் கான், இஹ்சானுல்லா ஜனத், அமிர் ஹம்சா, அஃப்சர் சாஸை.
இப்போட்டி காலை 09.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரஹானே பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.