India vs Afghanistan: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 68 ரன், ஷிவம் துபே 63 ரன் எடுத்தனர்.இந்த அசத்தல் வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“