India vs Afghanistan: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இன்று நடக்கும் ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதற்கு ஆப்கானிஸ்தான் அணி முட்டுக்கட்டை போட தீவிரமாக போராடும். அதனால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இந்தியா vs ஆப்கானிஸ்தான் 2வது டி20 மோதல் - ஆடும் லெவன் எப்படி இருக்கும்?
தனது சொந்த காரணங்களுக்காக முதல் போட்டியை தவறவிட்ட இந்திய முன்னணி வீரரான விராட் கோலி இன்றைய போட்டியில் களமிறங்குவார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் கடந்த போட்டியில் விளையாடவில்லை. அதனால் அவரும் இந்த போட்டியில் இருந்து ஓரங்கட்டப்படலாம். கோலி அணிக்குள் வருவதால் அவருக்கு சுப்மன் கில் அல்லது திலக் வர்மா இடம் அளிக்கும் நிலை ஏற்படலாம். மற்ற தேர்வைப் பொறுத்தவரை, இந்திய அணி அதே அணியுடன் தொடரலாம். கடந்த போட்டியின் நட்சத்திரங்களாக ஜொலித்த சிவம் துபே மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தங்கள் இடத்தை தக்கவைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் மொஹாலியில் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியது. ஆனால் வலுவான இந்திய அணியை தோற்கடிக்க அவர்கள் முழுவதுமாக இன்னும் நிலையான அணியாக இருக்க வேண்டும். முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான் போன்ற அவர்களின் முக்கிய வீரர்கள் மற்றும் இருவரும் மீண்டும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் மோசமாக வெளியேறிய ரஹ்மத் ஷாவுக்குப் பதிலாக இக்ராம் அலிகில் களமிறங்கலாம்.
இந்தியா vs ஆப்கானிஸ்தான்: இரு அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன்
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார்
ஆப்கானிஸ்தான்: இப்ராகிம் சத்ரான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ரம் அலிகில், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, முஜீப் உர் ரஹ்மான்
இந்தியா vs ஆப்கானிஸ்தான்: இரு அணி வீரர்கள் பட்டியல்
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்.
ஆப்கானிஸ்தான்: இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, கரீம் ஜனத், அஸ்மத்துல்லா உமர்சாய், ஷரபுதீன் அஷ்ரப், முஜீப் உர் ரஹ்மான், ரசீப் உர்ஹா , ஃபரீத் அஹ்மத், நவீன்-உல்-ஹக், நூர் அகமது, முகமது சலீம், கைஸ் அகமது, குல்பாடின் நைப்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.