Advertisment

IND vs AFG: 2-வது சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி; போராடி தோற்ற ஆப்கான்

இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்றது. மேலும் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
India vs Afghanistan 2nd T20I Predicted Playing XI in tamil

இந்தியா - ஆப்கானிஸ்தான் கடைசி மற்றும் 3வது டி20 போட்டியில் இன்று மோதல்

India vs Afghanistan: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், மொகாலியில் நடந்த முதலாவது டி20 ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Advertisment

இதனைத் தொடர்ந்து, இந்தூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 2வது போட்டியில் இந்திய அணி விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி பெங்களூருவில் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. 

ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்ட இந்திய அணி இன்று நடைபெற உள்ள ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கும். அதேவேளையில் ஆறுதல் வெற்றிக்காக ஆப்கானிஸ்தான் போராடும். இதனால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

  • Jan 17, 2024 23:26 IST
    2-வது சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி; போராடி தோற்ற ஆப்கான்

    2 பந்தில் கரீம் 1 ரன் எடுக்க 3 ஆவது பந்தைச் சந்தித்த குர்பாஸ் கேட்ச் மூலம் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.  



  • Jan 17, 2024 23:21 IST
    ஆப்கான் சூப்பர் ஓவர்; முதல் பந்திலே நபி அவுட்

    பிஷ்னோய் வீசிய முதல் பந்திலே நபி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்



  • Jan 17, 2024 23:16 IST
    இந்தியா சூப்பர் ஓவர்; ஆப்கானுக்கு 12 ரன்கள் இலக்கு

    5 ஆவது பந்தைச் சந்தித்த சாம்சன், தட்டி விட்டு எடுக்க முயல ரோகித் ரன் அவுட் ஆனார். இதனால் ஆப்கான் அணிக்கு 12 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது



  • Jan 17, 2024 23:14 IST
    இந்தியா சூப்பர் ஓவர்; 4 ஆவது பந்தில் ரிங்கு அவுட்

    3 ஆவது பந்தில் ரோகித் 1 ரன் அடிக்க, 4 ஆம் பந்தைச் சந்தித்த ரிங்கு கேட்ச் மூலம் அவுட் ஆனார்.



  • Jan 17, 2024 23:11 IST
    இந்தியா சூப்பர் ஓவர்; முதல் 2 பந்தில் 10 ரன்கள்

    பரீத் வீசிய முதல் 2 பந்துகளில் ரோகித் சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து 10 ரன்கள் விளாசினார்



  • Jan 17, 2024 23:06 IST
    மீண்டும் ஸ்கோர் சமன்; அடுத்த சூப்பர் ஓவர்

    கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டதால் ஆட்டம் அடுத்த சூப்பர் ஓவருக்குச் சென்றது



  • Jan 17, 2024 23:03 IST
    இந்தியா சூப்பர் ஒவர்: அடுத்தடுத்து 2 சிக்சர்

    3 மற்றும் 4 ஆம் பந்துகளை ரோகித் சிக்சருக்கு பறக்க விட்டார்



  • Jan 17, 2024 23:03 IST
    இந்தியா சூப்பர் ஒவர்: முதல் 2 பந்தில் 2 ரன்கள்

    அஸ்மதுல்லா வீசிய முதல் 2 பந்துகளில் ரோகித், ஜெய்ஸ்வால் தலா ஒரு ரன் அடித்தனர்



  • Jan 17, 2024 23:03 IST
    இந்தியா சூப்பர் ஒவர்: முதல் 2 பந்தில் 2 ரன்கள்

    அஸ்மதுல்லா வீசிய முதல் 2 பந்துகளில் ரோகித், ஜெய்ஸ்வால் தலா ஒரு ரன் அடித்தனர்



  • Jan 17, 2024 23:00 IST
    ஆப்கான் சூப்பர் ஒவர்: 16 ரன்கள்

    கடைசி பந்தில் 3 ரன்கள் கிடைக்க ஆப்கான் அணி சூப்பர் ஓவரில் 16 ரன்கள் எடுத்தது



  • Jan 17, 2024 22:59 IST
    ஆப்கான் சூப்பர் ஒவர்: ஐந்தாம் பந்தில் சிக்சர்

    குர்பாஸ் நான்காவது பந்தில் 1 ரன் அடிக்க, 5 ஆவது பந்தில் நபி சிக்சர் அடித்தார்



  • Jan 17, 2024 22:59 IST
    ஆப்கான் சூப்பர் ஒவர்: மூன்றாம் பந்தில் பவுண்டரி

    நபி இரண்டாவது பந்தில் 1 ரன் அடிக்க 3 ஆவது பந்தில் குர்பாஸ் பவுண்டரி அடித்தார்



  • Jan 17, 2024 22:57 IST
    ஆப்கான் சூப்பர் ஒவர் முதல் பந்து

    முகேஷ் வீசிய முதல் பந்தில் குல்பதீன் அவுட் ஆனார். அவர் கோலியிடம் கேட்ச் கொடுத்தார்



  • Jan 17, 2024 22:41 IST
    சமனில் முடிந்த ஆட்டம்; சூப்பர் ஒவர்

    ஆப்கான் அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் எடுத்தது. கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 ரன்கள் மட்டும் எடுத்ததால், வெற்றியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் நடக்க உள்ளது



  • Jan 17, 2024 22:35 IST
    நைப் அரை சதம்

    சிறப்பாக விளையாடிய நைப் 21 பந்துகளில் அரை சதம் விளாசினார். இதில் 4 சிக்சர்களும் 4 பவுண்டரிகளும் அடங்கும்.



  • Jan 17, 2024 22:28 IST
    சத்ரன் அவுட்

    அடுத்து வந்த கரீம் 5 ரன்களில் அவுட் ஆனார். அவர் அவேஷ் கான் பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்



  • Jan 17, 2024 22:23 IST
    கரீம் அவுட்

    அடுத்து வந்த கரீம் 2 ரன்களில் அவுட் ஆனார். அவரை சாம்சன் ரன் அவுட் ஆக்கினார்



  • Jan 17, 2024 22:16 IST
    நபி அவுட்

    சிறப்பாக ஆடி வந்த நபி 34 ரன்களில் அவுட் ஆனார். அவர் வாஷிங்டன் சுந்தர் பந்தில் அவேஷ் கானிடம் கேட்ச் கொடுத்தார்.



  • Jan 17, 2024 22:13 IST
    பார்ட்னர்ஷிப் அமைத்த நைப் – நபி

    அடுத்து நைப் மற்றும் நபி பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆப்கான் 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. நைப் 21 ரன்களுடனும் நபி 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்



  • Jan 17, 2024 22:11 IST
    ஒமர்சாய் டக் அவுட்

    அடுத்து களமிறங்கிய ஒமர்சாய் முதல் பந்திலே டக் அவுட் ஆனார். அவர் வாஷிங்டன் சுந்தர் பந்தில் பிஷ்னோயிடம் கேட்ச் கொடுத்தார்.



  • Jan 17, 2024 21:57 IST
    சத்ரன் அவுட்

    அரை சதம் அடித்த சத்ரன் அவுட் ஆனார். அவர் வாஷிங்டன் சுந்தர் பந்தில் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்தார்.



  • Jan 17, 2024 21:56 IST
    சத்ரன் அரை சதம்

    சத்ரன் 41 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடங்கும்



  • Jan 17, 2024 21:49 IST
    குர்பாஸ் அவுட்

    அரை சதம் அடித்த குர்பாஸ் 50 ரன்களில் அவுட் ஆனார். ஆப்கான் அணி 11 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.



  • Jan 17, 2024 21:48 IST
    குர்பாஸ் அரை சதம்

    சிறப்பாக ஆடிய குர்பாஸ் 31 பந்துகளில் அரை சதம் விளாசினார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும்.



  • Jan 17, 2024 21:43 IST
    ஆப்கான் சிறப்பான ஆட்டம்; விக்கெட் வீழ்த்த இந்தியா திணறல்

    குர்பாஸ் மற்றும் சத்ரன் சிறப்பாக ஆடி ரன் சேர்த்து வருகின்றனர். ஆப்கான் அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய பவுலர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறி வருகின்றனர்



  • Jan 17, 2024 21:24 IST
    அதிரடியை தொடரும் ஆப்கான்; 5 ஓவர்களில் 45/0

    குர்பாஸ் மற்றும் சத்ரன் அதிரடியாக ஆடி ரன் சேர்த்து வருகின்றனர். ஆப்கான் அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்துள்ளது



  • Jan 17, 2024 21:14 IST
    அதிரடியாக தொடங்கிய ஆப்கான்; 3 ஓவர்களில் 26/0

    ஆப்கான் அணியில் தொடக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் சத்ரன் களமிறங்கினார். குர்பாஸ் அதிரடியாக ஆடி 2 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். ஆப்கான் அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது



  • Jan 17, 2024 20:59 IST
    கடைசி 2 ஓவர்களில் 58 ரன்கள்

    இந்திய அணி 18 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் எடுத்திருந்தது. 19 ஆவது ஓவரில் 22 ரன்கள் மற்றும் 20 ஆவது ஓவரில் 36 ரன்கள் என கடைசி 2 ஓவர்களில் 58 ரன்கள் கிடைத்தது



  • Jan 17, 2024 20:57 IST
    ஆப்கான் பந்துவீச்சு

    ஆப்கான் அணியில் தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசிய பரீத் 3 விக்கெட்களை வீழ்த்தினார். அஸ்மத்துல்லா ஒரு விக்கெட் எடுத்தார்.



  • Jan 17, 2024 20:56 IST
    இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 212/4

    இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. ரோகித் 69 பந்துகளில் 121 ரன்கள் விளாசினார். இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும். மறுபுறம் ரிங்கு சிங் 39 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். இதில் 6 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும்



  • Jan 17, 2024 20:53 IST
    கடைசி ஓவரில் சிக்சர் மழை

    20 ஆவது ஓவரில் ரோகித் 2 சிக்சர்களையும் ஒரு பவுண்டரியும் விளாசினா. ரிங்கு சிங் 2 சிக்சர்கள் விளாசினார். இந்த ஓவரில் 36 ரன்கள் கிடைத்தது



  • Jan 17, 2024 20:51 IST
    19 ஆவது ஓவரில் 22 ரன்கள்

    19 ஆவது ஓவரில் ரோகித் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் விளாசினர். ரிங்கு சிங் ஒரு சிக்சர் விளாசினார். இதனால் இந்த ஓவரில் 22 ரன்கள் கிடைத்தது



  • Jan 17, 2024 20:50 IST
    ரிங்கு சிங் அரை சதம்

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் அரை சதம் விளாசினார்



  • Jan 17, 2024 20:18 IST
    ரோகித் அதிரடி அரை சதம்; இந்தியா நிதான ஆட்டம்

    ரோகித் மற்றும் ரிங்கு சிங் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். ரோகித் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினார். ரோகித் 41 பந்தில் அரை சதம் விளாசினார். இந்திய அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. ரோகித் 55 ரன்களுடனும் ரிங்கு 36 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்



  • Jan 17, 2024 19:54 IST
    10 ஓவர்கள் முடிவில் இந்தியா 61/4

    ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணியின் ரன்கள் சற்று உயர்ந்தது. இந்தியா அணி 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்தது



  • Jan 17, 2024 19:45 IST
    சஞ்சு சாம்சன் டக் அவுட்

    அடுத்து வந்த சஞ்ச சாம்சன் தான் சந்தித்த முதல் பந்திலே டக் அவுட் ஆனார். அவர் பரீத் பந்தில் நபியிடம் கேட்ச் கொடுத்தார். இந்தியா அணி 4.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்தது



  • Jan 17, 2024 19:34 IST
    சிவம் துபே ஒரு ரன்னில் அவுட்

    அடுத்து வந்த சிவம் துபே 6 பந்துகளைச் சந்தித்து 1 ரன்னில் அவுட் ஆனார். அவர் அஸ்மத்துல்லா பந்தில் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்தார். இந்தியா அணி 4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்தது



  • Jan 17, 2024 19:28 IST
    விராட் கோலி டக் அவுட்

    அடுத்து வந்த விராட் கோலி முதல் பந்திலே டக் அவுட் ஆனார். அவர் பரீத் பந்தில் இப்ராகிம் சத்ரனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்



  • Jan 17, 2024 19:26 IST
    ஜெய்ஸ்வால் அவுட்

    ஜெய்ஸ்வால் 6 பந்துகளைச் சந்தித்து 4 ரன்களில் அவுட் ஆனார். அவர் பரீத் பந்தில் நபியிடம் கேட்ச் கொடுத்தார். இந்தியா அணி 2.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் எடுத்தது



  • Jan 17, 2024 19:11 IST
    2 ஓவர்கள் முடிவில் இந்தியா 13/0

    இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஷ்வால் மற்றும் ரோகித் களமிறங்கினர். லெக் பை மூலம் 8 ரன்கள் கிடைக்க இந்திய அணி 2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்துள்ளது



  • Jan 17, 2024 18:40 IST
    இரு அணி விளையாடும் வீரர்கள் விவரம்

    ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), குல்பாடின் நயீப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், ஷரபுதீன் அஷ்ரஃப், கைஸ் அகமது, முகமது சலீம் ஏ சஃபி, மலீத்

    இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், அவேஷ் கான்



  • Jan 17, 2024 18:39 IST
    டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது



  • Jan 17, 2024 18:09 IST
    உத்தேச வீரர்கள் விவரம்

    இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா/சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்சர் படேல்/குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்/அவேஷ் கான்

    ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி



India Vs Afghanistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment