Asia Cup 2018, India vs Afghanistan Live Streaming Online: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், சூப்பர் 4 சுற்றில் இந்தியா இன்று(செப்.25) ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்தியா இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையிலும், ஆப்கன் அணி இறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையிலும் இரு அணிகளுக்குமே இது சம்பிரதாய ஆட்டம்! ஆனால் இந்தியா மாற்று வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு கொடுத்து, தனது ‘பென்ச் ஸ்ட்ரென்த்’தை பரீட்சிக்கும் வாய்ப்பு இது!
சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தானை வீழ்த்தியிருக்கும் இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுவிட்டது. ஆனால், ஆப்கன் அணி பாகிஸ்தானிடமும், வங்கதேசத்திடமும் கடுமையாக போராடி தோல்வி அடைந்தது. இதனால், அந்த அணிக்கு இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
இந்நிலையில், இன்று துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கும். இருப்பினும், இந்தப் போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
India vs Afghanistan Cricket Match Live Streaming Online: லோகேஷ் ராகுல் மற்றும் மனீஷ் பாண்டேவுக்கு மிடில் ஆர்டரில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று, பும்ரா, புவனேஷ் குமாருக்கு ஓய்வு தரப்பட்டு கலீல் அஹ்மது, தீபக் சாஹர் அல்லது சித்தார்த் கவுல்க்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனவும் தெரிகிறது.
இந்தப் போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி, இன்று மாலை 5 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. டிவி கவரேஜ் மாலை 4 மணிக்கு தொடங்க, 4.30 மணிக்கு டாஸ் போடப்படும்.
Star sports 1, Star sports 1 HD-ல் ஆங்கிலத்திலும், Star Sports 1 Tamil சேனலில் தமிழ் மொழியிலும், Star Sports 3 and Star Sports 3 HD சேனலில் ஹிந்தியிலும் போட்டியை நேரடியாக கண்டு களிக்கலாம்.
இணையதளத்தில் HotStar-ல் இப்போட்டியை நேரடியாக காணலாம். இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிலிலும் லைவ் ஸ்கோர் கார்டினை நீங்கள் கண்டுகளிக்கலாம்.