India vs Afghanistan: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்யும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்விளையாட உள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஆட்டம் நாளை பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற உள்ளது. இப்போட்டியானது இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் இருதரப்பு தொடர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஒரு வருடத்திற்குப் பிறகு டி20 அணிக்கு திரும்புகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதி ஆட்டம் தான் விராட் மற்றும் ரோகித் சர்மா இந்தியாவுக்காக பங்கேற்ற கடைசி டி20 ஆட்டமாகும். அதன் பின்னர் அவர்கள் இல்லாத நிலையில் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. தற்போது ஹர்திக் பாண்டியாவும், சூர்யகுமார் யாதவும் உடற்தகுதியுடன் இல்லாததால் ரோகித் மீண்டும் கேப்டனாக உள்ளார்.
இந்திய அணி அறிவிப்பு பல ஆச்சரியங்களை அளித்தது. 15 பேர் கொண்ட அணியில் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை தேர்வுக்குழு சேர்க்கவில்லை. அதேசமயம் இஷான் கிஷான் விலகியுள்ளார்.
மறுபுறம், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற ஆப்கானிஸ்தான் அதே உத்வேகத்துடன் களமிறங்கவுள்ளது. மேலும் இந்தியாவில் தங்கள் வெற்றியின் வேகத்தை தொடர எதிர்பார்க்கிறது. தற்போது ஸ்டாண்ட்-இன் கேப்டனாக இருக்கும் இப்ராஹிம் சத்ரான் அணிக்கு தலைமை தாங்குவார்.
இந்தத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான் சேர்க்கப்பட்டாலும், முதுகு அறுவை சிகிச்சையில் இருந்து அவர் குணமடைந்து வருவதால் அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியா vs ஆப்கானிஸ்தான் டி-20 தொடரை எந்த டி.வி-யில் நேரலையில் பார்ப்பது?
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை ஸ்போர்ட்ஸ்18 டி.வி சேனலில் நேரடிலையில் ஒளிபரப்பப்படும்.
இந்தியா vs ஆப்கானிஸ்தான் டி20 தொடரை ஆன்லைனில்லை லைவ் ஆக பார்ப்பது எப்படி?
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை ஜியோசினிமாவில் நேரலையில் ஒளிபரப்பப்படும்.
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் , அவேஷ் கான், முகேஷ் குமார்.
ஆப்கானிஸ்தான் அணி:
இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, கரீம் ஜனத், அஸ்மாவுல்லா உமர்சாய், ஷரபுதீன் அஷ்ரஃப், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல் ஹக்மான், ஃபசல் ஹக்மான், நவீன்-உல்-ஹக், நூர் அகமது, முகமது சலீம், கைஸ் அகமது, குல்பாடின் நைப் மற்றும் ரஷித் கான்.
டி20 தொடரைப் பொறுத்தவரை, மொஹாலியில் நடக்கும் தொடக்க ஆட்டத்திற்குப் பிறகு, ஜனவரி 14ம் தேதியில் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு இரண்டாவது டி20 போட்டி நடக்கிறது. இதன்பின்னர், மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ஜனவரி 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.