India vs Afghanistan Test Day 2 : இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி! எதிர்ப்பில்லாமல் சரண்டர் ஆன ஆப்கானிஸ்தான்!

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் 2வது நாள் ஆட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் 2வது நாள் ஆட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ind vs afg

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் 2வது நாள் ஆட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

Advertisment

INDvsAFG LIVE

5.20 PM: இரண்டாம் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி, 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.

3:00 PM: பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் எடுக்கப்பட்ட மிகக் குறைந்த ஸ்கோர் இது. கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா எடுத்த 112 ரன்கள் இதுவரை குறைந்த ஸ்கோராக இருந்தது.

Advertisment
Advertisements

அறிமுக ஆட்டத்தில் குறைந்த ஓவர்களில் சுருண்ட அணி என்கிற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் பெற்றிருக்கிறது. இதற்கு முன்பு பங்களாதேஷ் 46.3 ஓவர்களில் சுருண்டதே மோசமான சாதனை!

அறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள் வித்தியாசம் விட்டுக்கொடுத்து பாலோ ஆன் ஆன அணி என்கிற மோசமான சாதனைக்கும் ஆப்கானிஸ்தான் உரித்தாகியிருக்கிறது.

2:45 PM: ஆப்கானிஸ்தான் அணியில் முகம்மது நபி அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார். 5 வீரர்கள் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் அவுட் ஆனார்கள்.

2:30 PM : ஆப்கானிஸ்தான் 29.5 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

எனவே ஆப்கானிஸ்தான் ‘ஃபாலோ ஆன்’ பெற்றது.

11:30AM : இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா 71 ரன்களும், உமேஷ் யாதவ் 26 ரன்களும் எடுத்து கணிசமான பங்களிப்பை அளித்தனர். அஸ்வின் 18, ஜடேஜா 20, இஷாந்த் ஷர்மா 8 ரன்களுக்கு அவுட் ஆனார்கள்.

முன்னதாக முதல் நாள் ஆட்டத்தில் ஷிகர் தவான், முரளி விஜய் ஆகியோர் சதம் விளாசியதும், லோகேஷ் ராகுல் அரை சதம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

முன் தகவல்கள்:

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி. டெஸ்ட் போட்டியில் விளையாட அனுமதி கிடைத்த ஆப்கானிஸ்தான் அணிக்கு இதுவே முதல் சுற்றுப்பயணம். இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரஹானே முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகார் தவான், முரளி விஜய் இருவரும் சதம் அடித்தனர். இந்த ஜோடியின் மூன்றாவது செஞ்சுரி பாட்னர் ஷிப் இதுவாகும். முரளி விஜய்க்கு 12வது சதம் இது. லோகேஷ் ராகுல் 65 ரன்களிலும், புஜாரா 35 ரன்களிலும், ரஹானே 10 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 4 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலைஇ 9.30 மணிக்குத் தொடங்கியது. ஹிர்த்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் களத்தில் இருந்தனர். அஸ்வின் 17 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் இழந்தார். பாண்டியாவுடன் ஜடேஜா களத்தில் இருக்கிறார். இந்திய அணி 393 ரன்களுக்கு 7 விக்கெட்டை பறிகொடுத்து, தொடர்ந்து விளையாடி வருகிறது.

இந்த செய்தியை மலையாளம், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் மொழியில் படிக்க க்ளிக் செய்யவும்

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: