கடைசி டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி: 4-1 என தொடரை கைப்பற்றியது

India vs Australia T20 Match : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரில் இன்று நடைபெற்றது.

India vs Australia T20 Match : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரில் இன்று நடைபெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India Vs Australia 5th T20

இந்தியா - ஆஸ்திரேலியா 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி

India vs Australia 5th T20 Match Score Update: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க : India vs Australia Live Score, 5th T20: Can IND finish the series on winning note in Bengaluru?

உலககோப்பை தொடர் முடிந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில்,  முதல 2 போட்டிளில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய இளம் அணி கவுகாத்தியில் நடந்த 3-வது போட்டியில் கடைசி நேரத்தில் தோல்வியை சந்தித்தது.

தொடர்ந்து, நேற்று முன்தினம் ராய்ப்பூரில் நடைபெற்ற 4-வது போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (டிசம்பர் 03) இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய தொடரை வெற்றியுடன் முடிக்கும் என்று எதிாபார்க்கப்பட்டது.

Advertisment
Advertisements

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா

இதனிடையே தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் – ருத்துராஜ் கெய்க்வாட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 16 பந்துகளில் 21 ரன்களும், கெய்க்வாட் 12 பந்துகளில் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் 5 ரன்களுக்கும் ரின்குசிங் 6 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு பக்கம் போராட மறுமுனையில், அதிரடியாக ஆடிய ஜித்தேஷ் சர்மா 16 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 24 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்ரேயாஸ் அய்யர் – அக்சர் பட்டேல் ஜோடி தாக்குபிடித்து ஆடியது.

ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம்

இதில் அரைசதம் கடந்த ஸ்ரேயாஸ் அய்யர் 53 ரன்களும், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அக்சர் பட்டேல் 31 ரன்களும் குவித்து ஆட்டமிழந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில், பெஹரிண்டஃப், டிவார்ஷூட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹார்டி, எல்லிஸ், சன்ஙா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

161 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில், தொடக்க ஆட்டக்காரர், பிலிப் 4ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்கார்ர் டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் 28 ரன்கள் குவித்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மெக்டோர்மெட் ஒரு பக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த நிலையில், மறுமுனையில் ஹார்டி 6 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து, களமிறங்கிய டிம் டேவிட் 17 பந்துகளில் ஒரு சிக்சருடன் 17 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், அடுத்து மேத்யூ ஷாட் களமிறங்கினார். இதனிடையே அரைசதம் நடந்த  மெக்டோர்மெட் 36 பந்துகளில் 5 சிக்சருடன் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மேத்யூ ஷாட் 11 பந்துகளில் 16 ரன்களும், டவர்ஷிஸ் முதல் பந்திலேயே ரன் கணக்கை தொடங்காமலும் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் மேத்யூ வேட் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியா அணியை வெற்றிப்பாதையை நோக்கி அழைத்து சென்றார்.

இந்திய அணி வெற்றி

இதன் மூலம் கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய் அர்ஷ்தீப் சிங் முதல் 2 பந்துகளில் ரன் கொடுக்காத நிலையில், 3-வது பந்தில் மேத்யூ வேட் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அடுத்த 3 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங், பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 03, 2023 22:18 IST

    கேப்டன் மேத்யூ வேட் அதிரடி

    8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் மேத்யூ வேட் அணியை வெற்றிப்பாதைக்கு தழைத்து செல்லும் வகையில் அதிரடியாக விளையாடி வருகறார். ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 10 ரன்கள் தேவை



  • Dec 03, 2023 21:56 IST

    மெக்டோர்மெட் அரைசதம்

    ஆஸ்திரேலியா அணியில் 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மெக்டோர்மெட் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போதுவரை ஆஸ்திரேலியா அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.



  • Dec 03, 2023 21:49 IST

    4-வது விக்கெட்டை பறிகொடுத்த ஆஸ்திரேலியா

    161 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலயா அணி 14 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு 37 பந்துகளில் 58 ரன்கள் எடுக்க வேண்டும்



  • Dec 03, 2023 21:15 IST

    2 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா

    161 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பிலிப் 4 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் 28 ரன்களும் ஆட்டமிழந்தனர். 6 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது.



  • Dec 03, 2023 20:41 IST

    ஆஸ்திரேலியா அணிக்கு 161 ரன்கள் இலக்கு

    20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்துள்ளது. ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.



  • Dec 03, 2023 20:33 IST

    அக்சர் பட்டேல் அவுட்

    3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் நிதானமாக விளையாடிய நிலையில், 37 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல், 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



  • Dec 03, 2023 20:33 IST

    அரைசதம் கடந்த ஸ்ரேயாஷ் அய்யர் அவுட்

    3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் நிதானமாக விளையாடிய நிலையில், 37 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



  • Dec 03, 2023 20:15 IST

    அதிரடி காட்டிய ஜித்தேஷ் சர்மா

    6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாடிய நிலையில், 16 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 24 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 



  • Dec 03, 2023 19:45 IST

    அடுத்தடுத்து விக்கெட்டுகள்

    5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணியில் அடுத்து சூர்யகுமார் யாதவ் 5 ரன்களுக்கும், ரின்கு சிங் 6 ரன்களுக்கும் அடுத்தடுத்து வீழ்ந்தனர். 



  • Dec 03, 2023 19:25 IST

    5 ஓவர்கள் முடிவில் இந்தியா

    முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. ருத்ராஜா 10 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஸ்ரேயாஸ் - சூர்யகுமார் யாதவ் ஜோடி களத்தில் விளையாடி வருகிறது.



  • Dec 03, 2023 19:18 IST

    தொடக்க ஜோடி அவுட்

    முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ருத்ராஜ் கெய்க்வாட் 12 பந்துகளில் பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



  • Dec 03, 2023 19:07 IST

    இந்திய அணியில் மாற்றம்

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், இந்திய அணியில் தீபக் சஹாருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். 



India Vs Australia

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: