Advertisment

India vs Australia score card : வார்னர், ஃபின்ச் சதம்; ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி!

IND vs AUS 1st ODI Scorecard: இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஸ்கோர், விக்கெட், லைவ் கமெண்டரிகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கு இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs Australia Live Score,

India vs Australia Live Score,

India Vs Australia 1st ODI Score Updates: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மும்பையில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர், ஃபின்ச் இருவரும் சதமடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

Advertisment

கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,...

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. கிரிக்கெட் அரங்கில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இந்த தொடரையும் வெல்ல உறுதி பூண்டுள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ரோகித் சர்மா, முகம்மது ஷமி உள்ளிட்ட வீரர்கள் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும் என்பதில் யாருக்கு மாற்றுக்கருத்து இல்லை

இந்திய அணி

ரோகித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பண்ட், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, முகம்மது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, யுவேந்திர சஹல்

ஆஸ்திரேலிய அணி

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஸ்சாக்னே, அலெக்ஸ் காரே (விக்கெட் கீப்பர்), டி ஆர்சி சார்ட், ஆஷ்டன் டர்னர், ஜோஷ் ஹசேல்வுட், பேட் கும்மின்ஸ்ல, மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆஜம் ஜம்பா, ஆஷ்டன் அகார், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக ஷிகர் தவான் 74 ரன்களும் கே.எல்.ராகுல் 47 ரன்களும் எடுத்தனர்.

256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இருவரும் ஆட்டமிழக்காமல் சதம் அடித்த நிலையில், 37.4 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெறச் செய்தனர். வார்னர் 128 ரன்களும் ஃபின்ச் 110 ரன்களும் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

Live Blog

IND vs AUS 1st ODI Scorecard: இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஸ்கோர், விக்கெட், லைவ் கமெண்டரிகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கு இணைந்திருங்கள்














Highlights

    20:29 (IST)14 Jan 2020

    வார்னர், ஃபின்ச் சதம்; ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி!

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மும்பையில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர், ஃபின்ச் இருவரும் சதமடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    20:15 (IST)14 Jan 2020

    வார்னரைத் தொடர்ந்து சதமடித்த ஃபின்ச்

    256 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியி தொடக்க ஆட்டக்காரர் வார்னர், இந்திய பந்துவீச்சை தெறிக்கவிட்டு 90 பந்துகளுக்கு 100 ரன்களைக் குவித்து சதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து ஃபின்ச் 109 பந்துகளில் 100 ரன்களை எடுத்து சதமடித்தார்.

    19:57 (IST)14 Jan 2020

    இந்திய பந்துவீச்சை தெறிக்கவிட்டு சதமடித்தார் வார்னர்!

    256 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியி தொடக்க ஆட்டக்காரர் வார்னர், இந்திய பந்துவீச்சை தெறிக்கவிட்டு 90 பந்துகளுக்கு 100 ரன்களைக் குவித்து சதம் அடித்துள்ளார்.

    19:46 (IST)14 Jan 2020

    வார்னரும் ஃபின்ச்சும் ஆடுவதைப் பார்த்தால் இரண்டே பேர் 256 ரன் அடிச்சுடுவாங்களோ?

    ஆஸ்திரேலிய அணி 27 ஓவர்களில் 180 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் வார்னரும் ஃபின்ச்சும் விக்கெட்டை கொடுக்காமல் தலா 80 ரன்களைக் கடந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆடுவதைப் பார்த்தால் இரண்டே பேர் 256 ரன்கள் அடித்து வெற்றி பெற்றுவிடுவார்களோ என்று கருதவேண்டியுள்ளது.

    19:05 (IST)14 Jan 2020

    இந்திய அணியின் பந்துவீச்சை அரைசதம் அடித்து தெறிக்கவிட்ட வார்னர், ஃபின்ச்

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் இருவருமே அதிரடியாக விளையாடி வருகின்றனர். வார்னரைத் தொடர்ந்து, ஃபின்ச்சும் அரை சதம் அடித்தார். விக்கெட் விழாமல் இந்திய அணியின் பந்துவீச்சை வார்னரும் ஃபின்ச்சும் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

    18:52 (IST)14 Jan 2020

    ஃபின்ச்சை முந்திக்கொண்டு அரைசதம் அடித்த வார்னர்

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் அதிரடியாக விளையாடி வருகின்றனர். அதிரடியாக விளையாடிய ஃபின்ச்தான் முதலில் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை முந்திக்கொண்டு வார்னர் அரை சதம் அடித்தார்.

    18:29 (IST)14 Jan 2020

    வெளுத்து வாங்குகிறது ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்களில் 60 ரன்களைத் தாண்டியது

    256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் 25 ரன்களையும், ஃபின்ச் 39 ரன்களையும் கடந்து விளையாடி வருகின்றனர். அந்த அணி விக்கெட் இழப்பின்றி 8.4 ஓவர்களில் 69 ரன்கள் எடுத்துள்ளது.

    18:01 (IST)14 Jan 2020

    256 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கியது ஆஸ்திரேலிய அணி
    இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 49.1 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் எடுத்தது. 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் களம் இறங்கி விளையாடி வருகின்றனர்.

    17:19 (IST)14 Jan 2020

    இந்திய அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட்

    முதலில் பேட் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 49.1 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் எடுத்தது. 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி அடுத்து களம் இறங்க உள்ளது.

    16:01 (IST)14 Jan 2020

    கோலி 16 ரன்னில் அவுட்

    கோலி 16 ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியுள்ளார்.  இந்திய அணி 31.2 ஓவரில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்துள்ளது. களத்தில் ரிஷப் பண்ட் உடன் ஜடேஜா இணைந்துள்ளார்.

    15:47 (IST)14 Jan 2020

    கும்மின்ஸ் பந்தில் குப்புற விழுந்தார் தவான்

    கும்மின்ஸ் பந்தை, தவான்  லெக் சைடில் அடிக்க முயன்ற நிலையில், எட்ஜில் பட்டு அகாரிடம் புகுந்தது பந்து.  74 ரன்களில் தவான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். தற்போது களத்தில் கேப்டன் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளனர். இந்திய அணி 29 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது.

    15:39 (IST)14 Jan 2020

    களமிறங்கினார் கோலி ; ரசிகர்கள் ஜாலி

    ராகுல் அவுட் ஆனதை தொடர்ந்து கேப்டன் கோலி களம் இறங்கியுள்ளார். சமீபகாலமாக கோலியின் ஆட்டம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ள நிலையில், இந்த போட்டியிலும் ஏதாவது ஒரு அதிசயத்தை அவர் நிகழ்த்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    15:37 (IST)14 Jan 2020

    ராகுல் அவுட்

    ஸ்டீவ் ஸ்மித் வீசிய பந்தில் கேஎல் ராகுல் அவுட் ஆனார். 61 பந்துகளை எதிர்கொண்ட ராகுல், 47 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இந்திய அணி 27.1 ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 134 ரன்கள் எடுத்துள்ளது.

    15:31 (IST)14 Jan 2020

    கங்காருவின் முயற்சி இந்த முறையும் தோல்வி

    தவான் - ராகுல் ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்துள்ள நிலையில், எப்படியாவது இவர்களது விக்கெட்டை உடைத்துவிட வேண்டுமென்று ஆஸ்திரேலிய அணியினர் போராடி வருகின்றனர். ராகுல் எதிர்கொண்ட பந்தை கேட்ச் என்று ஆஸி., வீரர்கள் முறையிட்ட நிலையில், அம்பயர் நாட் அவுட் என அறிவித்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 26 ஓவர்கள் முடிவில் 129/1 ஆக இருந்தது.

    15:22 (IST)14 Jan 2020

    தவான் - ராகுல் 100 ரன் பார்ட்னர்ஷிப்

    தவான் - ராகுல் ஜோடி 100 ரன் பார்ட்னர்ஷிப் எடுத்துள்ளது. ராகுல் 40 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணியின் ஸ்கோர் 24 ஓவர்கள் முடிவில் 117/1 ஆக உள்ளது.

    15:20 (IST)14 Jan 2020

    3வது முறையாகவும் தப்பித்த தவான்

    ஆடம் ஜம்பா பவுலிங்கில் ஜம்பா கேட்சை தவறவிட்டதால், 3வது முறையாக தவான் தப்பித்தார். அப்போது இந்திய அணி 22 ஓவர் முடிவில் 109/1 ஆக இருந்தது.

    15:11 (IST)14 Jan 2020

    இந்தியா சதம்

    இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது. 

    15:07 (IST)14 Jan 2020

    தவான் அரைசதம்

    அரைசதம் கடந்தார் ஷிகர் தவான். தவான், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இது தவானின் 28வது அரைசதம் ஆகும். 66 பந்துகளில் தவான் அரைசதம் கடந்துள்ளார்.

    publive-image

    15:01 (IST)14 Jan 2020

    தவான் 1000

    பேட் கும்மின்ஸ்சின் முதல் பந்து்களை தவான் சற்று தடுமாற்றத்துடன் எதிர்கொண்டாலும், அடுத்த 2 பந்துகளை பவுண்டரிகளாக மாற்றினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 1000 வீரர்களை கடந்த வீரர்களின் பட்டியலில் தவான் இடம்பெற்றார்.  இந்திய அணியின் ஸ்கோர் 12 ஓவர் முடிவில் 55/1 ஆக இருந்தது.

    14:59 (IST)14 Jan 2020

    முதல் பவர்பிளே முடிவில் இந்தியா 45/1

    10 ஓவர் முடிந்த நிலையில், இந்திய அணியின் ஸ்கோர் 45/1 ஆக இருந்தது. 

    14:57 (IST)14 Jan 2020

    அசுரனை வதம் செய்த தவான்

    முதல் ஓவரில் 2 ரன்களை மட்டுமே தந்த ரிச்சர்ட்சன், அடுத்ததாக தவானிடம் சிக்கினார். தவான் அந்த ஓவரை வச்சு செஞ்சார். இரண்டு பவுண்டரிகள் விளாசிய நிலையில், இந்திய அணியின் ஸ்கோர் 9வது ஓவரில் 38/1 ஆக உயர்ந்தது.

    14:56 (IST)14 Jan 2020

    விறு விறு தவான்

    ஆட்டம் சுணங்கிய நிலையில் சென்று கொண்டிருந்த நிலையில், தவான் பந்தை எதிர்கொண்டார். 8வது ஓவரில் 9 ரன்களை எடுத்த நிலையில் ஸ்கோர் 30/1 ஆக இருந்தது

    14:53 (IST)14 Jan 2020

    "அசுரன்" ரிச்சர்ட்சன்

    கேன் ரிச்சர்ட்சன் தான் வீசிய முதல் ஓவரில் 2 ரன்களை மட்டுமே தந்து தான் அசுரன் என்பதை நிரூபித்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 7 ஓவர்கள் முடிவில் 21/1 ஆக இருந்தது.

    14:51 (IST)14 Jan 2020

    நான் தப்பி பிழைச்சவன்டா - தவான்

    இந்திய அணி 13 ரன்களில் ஒரு விக்கெட்டை இழந்திருந்த நிலையில், ஆரோன் பிஞ்ச் வீசிய பந்து தவான் காலில் பட்டது. எல்பிடபிள்யூ கேட்டு ஆஸ்திரேலிய அணி முறையிட்ட நிலையில், அது நாட் அவுட் என தெரியவந்தது. இதனால், ஆஸ்திரேலியாவின் ஒரு ரிவியூ வீணாய்ப்போனது.  இதனால் தவான் தப்பினார்.

    பேட் கும்மின்ஸ் வீசிய பந்தை தூக்கி அடிக்க முற்பட்டபோது பந்து எட்ஜானது. ஆடம் ஜம்பா, கேட்சை தவற விட்டார். இதனால், இரண்டாவது முறையாக அவுட் ஆகும் வாய்ப்பிலிருந்து தவான் தப்பினார்.

    14:45 (IST)14 Jan 2020

    அதிர்ச்சி தந்த ரோகித் சர்மா

    இலங்கை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில், ரோகித் சர்மா, இந்த தொடரில் பங்கேற்றார்.  இன்றைய போட்டியில் ரோகித் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4.3 ஓவரில், ஸ்டார்க் பந்தில் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 13 ஆக இருந்தது.

    India Vs Australia 1st ODI Score Updates: ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் சோகத்தை மறக்க, இந்த தொடரில் வென்று சாதிப்போம் என்று இந்திய அணிக்கு, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சவால் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    India Live Cricket Score Australia
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment