India vs Australia Match 1st ODI Live Cricket Score Updates: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டி20 தொடரில் டிரா, டெஸ்ட் தொடரில் மெகா வெற்றி என இந்தத் தொடரில், ஆதிக்கம்செலுத்தி வரும் விராட் கோலி தலைமையிலான டீம் இந்தியா, ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், காயம்பட்ட கங்காருக்கள் சூடான மூச்சோடு வெற்றிக்காக காத்திருக்கின்றன.
4:17 PM: ஒரு நாள் போட்டிகளில் தனது 1000வது வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா
,
1000 wins for Australia across formats. #AUSvIND
— Cricbuzz (@cricbuzz) January 12, 2019
- 384 in Tests
- 558 in ODIs
- 58 in T20Is pic.twitter.com/DrouwfWoqR
3:48 PM: இந்தியாவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா! ரோஹித் ஷர்மாவின் சதம் வீணானது!
3:11 PM: 22வது சதம் அடித்தார் ரோஹித்! இந்தியா வெற்றி பெற 96 ரன்கள் தேவை
,
Most ODI 100s in career
— Deepu Narayanan (@deeputalks) January 12, 2019
49 S Tendulkar
38 V Kohli
30 R Ponting
28 S Jayasuriya
26 H Amla
25 K Sangakkara/ AB de Villiers
23 C Gayle
22 S Ganguly/ T Dilshan/ ROHIT SHARMA#AUSvIND
2:27 PM: 2018ம் ஆண்டு தோனி அடித்த அரைசதங்கள் - 0
2019ம் ஆண்டு தோனி அடித்த அரைசதங்கள்- 1
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி ஒரு நாள் போட்டிகளில் 68வது அரைசதம் கடந்து ஆட்டம் இழந்தார். இந்தியா வெற்றி பெற 148 ரன்கள் தேவை.
2:04 PM: ரோஹித் ஒரு நாள் போட்டிகளில் 38வது அரைசதம் கடந்தார். இது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இவர் அடிக்கும் 6வது அரைசதம். 27 ஓவர்களில் இந்தியா 108 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற 180 ரன்கள் தேவை.
1:35 PM: ஆஸ்திரேலியா- இந்தியா இடையே ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் அடித்த இந்தியர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா (1630) மூன்றாவது இடத்திற்கு முன்னேறினர்
1:26 PM: ஒரு நாள் போட்டிகளில் தோனி 10,000 ரன்களை கடந்தார். 19 ஓவர்கள் நிறைவடைந்து இருக்கிறது, இந்தியா 62 ரன்களை எடுத்துள்ளது. தோனி(16) மற்றும் ரோஹித் சர்மா (38) அணியை சரிவில் இருந்து மீட்கும் பொறுப்பில் உள்ளனர்.
,
Roar whistles for a #Thala Milestone!10K with the bat, donning the blue! #WhistlePodu #AUSvIND ???????? pic.twitter.com/BjC1Xl1a0M
— Chennai Super Kings (@ChennaiIPL) January 12, 2019
12:42 AM: தடுமாறும் இந்திய அணி! 7 ஓவர்கள் முடிவில் 14 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்தது. வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுகளை அள்ளினார். களத்தில் தோனி, ரோஹித் உள்ளனர்.
11:39 AM: 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா 288 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப், புவனேஸ்வர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்
,
Fifties for Usman Khawaja, Shaun Marsh and Peter Handscomb, and an unbeaten 47 from Marcus Stoinis, but will Australia be able to defend 288 at the SCG? https://t.co/pUAGORmGJ7 #AUSvIND pic.twitter.com/H4BMBRSFU9
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 12, 2019
10:58 AM: ஆமை வேகத்தில் நகரும் ரன்-ரேட். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சில் தினறி வருகின்றனர்.
,
27 in the last 7 overs. Australia are making it tougher for themselves and will need a grandstand finish to get to 280. India happy at this stage.
— Harsha Bhogle (@bhogleharsha) January 12, 2019
10:48 AM:
50 ரன்கள் அடித்த பின்பு குல்தீப் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் மார்ஷ்! 42 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பத்திற்கு ஆஸ்திரேலியா 202 ரன்கள் எடுத்துள்ளது
,
FIFTY! There's another ODI half-century for Shaun Marsh, this one coming off 65 balls! https://t.co/rHhkFrd50M #AUSvIND pic.twitter.com/v1TarVPvNw
— cricket.com.au (@cricketcomau) January 12, 2019
மேலும் படிக்க - ஆஸ்திரேலியாவில் அடுத்த சவால்: இந்தியா ‘பிளேயிங் 11’-ல் இடம் பெறுவது யார், யார்?
இந்திய நேரப்படி, இன்று காலை 7.50 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
சிட்னியில் இன்று மழை பெய்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என ரிப்போர்ட் சொல்வதால், முழு போட்டி கன்ஃபார்ம். வெற்றி, தோல்வி யாருக்கு என்பதே சஸ்பென்ஸ்.
இந்திய அணியை பொறுத்தவரை தோனி மீண்டும் களத்திற்கு திரும்பியிருப்பது ஃப்ரெஷ் மொமன்ட் என்றாலும், தனது இருப்பை (கெத்தை) தக்க வைத்துக் கொள்ள, இந்தத் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவர் சிறப்பாக ஆடினால் நல்லது. சூப்பர்ஸ்டார் ரஜினி, 'காளி'யாட்டம் ஆடி, மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்பியிருப்பதை போல, தோனியும் காளியாட்டம் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பதே உண்மை.
இந்நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி பிளேயிங் XI: ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(c), அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், எம் எஸ் தோனி(wk), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ் குமார், முகமது ஷமி, கலீல் அஹ்மது
இப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டினை நமது தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நீங்கள் கண்டு களிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.