New Update
/indian-express-tamil/media/media_files/PTHHMcgNKJnLRyzFX3gs.jpg)
ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் அணியில் இடம்பெற மாட்டார்கள் என அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் அணியில் இடம்பெற மாட்டார்கள் என அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அறிவித்துள்ளார்.
Iindia-vs-australia: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை பிற்பகல் 1:30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற உள்ளது.
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், கே.எல் ராகுல் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துகிறார். ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் அணியில் இடம்பெற மாட்டார்கள் என அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அறிவித்துள்ளார். காயத்திலிருந்து மீண்டு வரும் இருவரும் அடுத்த ஆட்டத்தில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நடக்க உள்ள உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இவ்விரு அணிகள் விளையாடும் கடைசி ஒருநாள் தொடர் இதுவாகும். அதனால், இரு அணிகளும் தங்களின் விருப்பங்களை முயற்சிக்கும். மேலும், இந்திய சூழல் குறித்து கூடுதலாக அறிய முயலும்.
மொகாலி ஆடுகளம் எப்படி?
பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் உள்ள ஆடுகளம் அற்புதமான பேட்டிங் டிராக் ஆகும். அதனால், இது பேட்ஸ்மேன்கள் சொர்க்கபூமியாக உள்ளது. வேகப்பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும். அதேவேளையில் பவுன்ஸ் இருக்கும். பேட்டர்கள் தங்கள் ஷாட்களை லைனில் விளையாட முடியும்.
இங்கு நடந்த 16 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 10ல் வென்று 6ல் தோல்வியுற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 1ல் மட்டுமே வென்றுள்ளது. 4 வெற்றிகளை பதிவு செய்துள்ள ஆஸ்திரேலியாவுக்கு இது ராசியான மைதானமாக இருக்கிறது. கடைசியாக நடந்த (10 மார்ச் 2019) போட்டியில் இந்தியா (50 ஓவரில் 358/9) ஆஸ்திரேலியாவிடம் (47.5 ஓவரில் 359/6) 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (410 ரன்கள்) மற்றும் அதிகபட்ச ஸ்கோர் (208) பதிவு செய்த வீரராக ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். அதே போல இங்கு அதிக விக்கெட்களை (11) எடுத்த பவுலராக ஹர்பஜன் சிங் முதலிடத்தில் இருக்கிறார். இங்கு இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் 392/4 ஆகும். இலங்கைக்கு எதிராக, 2017ல் எடுத்தது ஆகும்.
வெதர் ரிப்போர்ட்:
போட்டி நடக்கும் மொகாலி நகரில் நாளை லேசான மேகமூட்டத்துடன் கூடிய வறண்ட வானிலை நிலவும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, போட்டி முழுமையாக நடைபெறும் என உறுதியாக நம்பலாம்.
பிளேயிங் லெவன் எப்படி?
இந்தியா:
சுப்மன் கில், இஷான் கிஷன், திலக் வர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ், முகமது ஷமி
ஆஸ்திரேலியா:
மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.