Advertisment

IND vs AUS: சூர்யகுமார், இஷான் கிஷன் அதிரடி; ஆஸி.,க்கு எதிராக இந்தியா த்ரில் வெற்றி

இங்கிலிஸ் சதம், ஸ்மித் அரை சதம்; 208 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா; இஷான் கிஷான், சூர்யகுமார் அதிரடி அரைசதம்; கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை

author-image
WebDesk
New Update
Suryakumar Yadav stunned by record low Attendance For Press Conference Tamil News

இந்தியா - ஆஸ்திரேலியா முதலாவது டி20 போட்டி - இன்று மோதல்

India Vs Australia Score Updates, 1st T20: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணியளவில் நடைபெற உள்ளது.

Advertisment

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விவரம்

இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா

ஆஸ்திரேலியா: மேத்யூ ஷார்ட், ஸ்டீவன் ஸ்மித், ஜோஷ் இங்கிலிஸ், ஆரோன் ஹார்டி, மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்களாக ஸ்மித் மற்றும் மேத்யூ ஷார்ட் களமிறங்கினர். ஷார்ட் 13 ரன்களில் ரவி பிஷ்னோய் பந்தில் போல்டானார். இதனையடுத்து இங்கிலிஸ் களமிறங்கினார். ஒரு முனையில் ஸ்மித் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ஆடிய இங்கிலிஸ் பவுண்டரிகளாக விளாசினார். இதனால் ஆஸ்திரேலியா அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக ஆடி வந்த இங்கிலிஸ் அரை சதம் விளாசினார். தொடர்ந்து சிக்சர்களாக விளாசிய இங்கிலிஸ் சதத்தை நெருங்கிய நிலையில், மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ஸ்மித் அரை சதம் அடித்தார். இருப்பினும் ஸ்மித் 52 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்ததாக ஸ்டாய்னிஸ் களமிறங்கிய சிறிது நேரத்திலே இங்கிலிஸ் சதம் விளாசினார். ஆஸ்திரேலியா அணி 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்த அதிரடியாக ஆடிய இங்கிலிஸ் 50 பந்துகளில் 110 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இதில் 8 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும். அவர் பிரசித் பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்தார்.

அடுத்து களமிறங்கிய டேவிட் ஒரு சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்திருந்தப்போது, ஆஸ்திரேலியா அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஸ்டாய்னிஸ் 7 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது.

இந்தியா பேட்டிங்

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் களமிறங்கினார். ருதுராஜ் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். அடுத்ததாக இஷான் கிஷன் களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும். ஷார்ட் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். இதனால், இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து இஷான் கிஷன் – சூர்யகுமார் ஜோடி அதிரடியாக ஆடி ரன் குவித்தது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 3 ஆவது விக்கெட்க்கு 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இஷான் கிஷான் 39 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்கும்.

அடுத்து களமிறங்கிய திலக் வர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிங்கு சிங் கம்பெனி கொடுக்க சூர்யகுமார் அதிரடியைத் தொடர்ந்தார். இருப்பினும் சூர்யகுமார் 42 பந்துகளில் 80 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். இந்த நேரத்தில் இந்திய அணி 194 ரன்கள் எடுத்திருந்தது.

வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது ரிங்கு சிங் பவுண்டரிகள் மூலம் ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் களமிறங்கிய அக்சர் படேல் 2 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த பிஷ்னோய் மற்றும் அர்ஷ்தீப் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆகினர்.

இதனால் கடைசி பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், ரிங்கு சிங் சிறப்பாக ஆடி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா தரப்பில் சங்கா 2 விக்கெட்களையும், பெகண்ட்ரஃப், ஷாட், அப்பாட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்த ஒரு வாரத்திற்குள், இரு நாடுகளும் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்கிறது. உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் விளையாடிய மூத்த வீரர்கள் அனைவரும் ஓரங்கட்டப்பட்டு,  இஷான் கிஷன், சூர்யகுமார் மாற்று வீரர் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மட்டும் இடம் பிடித்துள்ளனர். 

ஹர்திக் பாண்ட்யா கணுக்கால் காயத்தால் அவதிப்படுவதால் அவருக்கு பதிலாக உலகின் 'நம்பர் ஒன்' டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா, இஷான் கிஷன் போன்ற இளம் அதிரடி வீரர்களும், முகேஷ்குமார், அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப்சிங் போன்ற பவுலர்களும் அணிக்கு வலுசேர்க்கிறார்கள்.

அடுத்த டி-20 உலகக் கோப்பை ஜூன் 2024ல் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த இருதரப்பு தொடரிலிருந்து இந்திய அணி போட்டிக்குத் தயாராக இருக்கிறது. அதனால் இந்தப் போட்டி சரியான வீரர்களை அடையாளம் காண்பதற்கான சோதனை முயற்சியாக இருக்கும். அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் செயல்படுகிறார்.

உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்தவர்களில் டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித், ஆடம் ஜம்பா, ஜோஸ் இங்லிஸ், சீன் அப்போட், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகிய 7 வீரர்கள் டி20 போட்டியிலும் தொடருகிறார்கள். இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆரோன் ஹார்டி கர்வம் ஈர்க்கிறார். 

நேருக்கு நேர் 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 26 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 15-ல் இந்தியாவும், 10-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:- 

இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார். 

ஆஸ்திரேலியா: மேத்யூ வேட் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி, சீன் அபோட், கேன் ரிச்சர்ட்சன், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா

இரு அணிகளின் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு: 

ஆஸ்திரேலியாவின் அணி: மேத்யூ வேட் (கேப்டன்), ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், கேன் ஜம்பா. 

இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (வி.கே.), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார். 

குறிப்பு: ராய்ப்பூர் மற்றும் பெங்களூரில் நடைபெறும் கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இணைவார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment