Advertisment

கவனம் ஈர்க்கும் ஹார்டி; ஓப்பனராக ருத்து: இந்தியா vs ஆஸி., ஆடும் லெவன் பற்றி ஒரு பார்வை

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணியளவில் நடைபெற உள்ளது.

author-image
WebDesk
New Update
 India vs Australia 1st T20I Visakhapatnam predicted playing 11 in tamil

இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலகக் கோப்பையை சிறப்பாக விளையாடினார்.

India-vs-australia: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணியளவில் நடைபெற உள்ளது.

Advertisment

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்த ஒரு வாரத்திற்குள், இரு நாடுகளும் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்கிறது. அகமதாபாத்தில் ஏற்பட்ட இதயத்தை உடைக்கும் தோல்விக்குப் பிறகு இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு காயத்தின் வடுக்கள் ஆறாமல் இருந்தாலும், கிரிக்கெட் காலண்டர், உலகக் கோப்பைகள் தொடர்ந்து வருவதால் ஓய்வு எடுத்து சிந்திக்க நேரமில்லாத சூழல் நிலவுகிறது. 

அடுத்த டி 20 உலகக் கோப்பை ஜூன் 2024ல் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த இருதரப்பு தொடரிலிருந்து இந்திய அணி போட்டிக்குத் தயாராக இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக இந்திய பேட்டிங் பொறுப்புகளை தங்களது தோளில் சுமந்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் இந்த ஃபார்மெட்டில் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது. டி20 கேப்டனாக இருந்து வரும் ஹர்திக் பாண்டியாவும் காயம் அடைந்துள்ளார். எனவே, இளம் வீரர்கள் களமிறங்க தயாராக இருப்பதைக் காட்ட இது ஒரு வாய்ப்பை அளிக்கிறது.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, இந்தத் தொடருக்கு இளம் மற்றும் அனுபவங்கள் கொண்ட வீரர்களின் கலவையுடன் களமிறங்க முடிவு செய்துள்ளனர். உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றுள்ள 7 வீரர்கள் அணியில் உள்ளனர். இருப்பினும், தரமான இந்திய சூழல்களுக்கு எதிராக இந்த வெளிநாட்டு நிலைமைகளுக்கு நடுவில் இளம் வீரர்களுக்கு முடிந்தவரை அதிக நேரம் கொடுப்பதே பார்வையாளர்களின் குறிக்கோளாக இருக்கும்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Australia tip-off XI: Arshdeep back in the side, Gaikwad’s new role as vice-captain, Australia’s potential X-factor Aaron Hardie

மீண்டும் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 

இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலகக் கோப்பையை சிறப்பாக விளையாடினார். ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், அர்ஷ்தீப் பந்துவீச்சு தாக்குதலை தலைமை தாங்குவார். அழுத்தத்தின் கீழ் பந்துவீசுவதற்கான மனோபாவம் மற்றும் அமைதியானது, குறைந்த பட்சம் டி20 ஆட்டத்தில் இந்த தாக்குதலை அவர் வழிநடத்த முடியும் என்பதற்கான பார்வையை அளித்தது. அவரின்  திறனைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை என்றாலும், சமீபத்திய உலகக் கோப்பையில் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் பந்து வீசிய விதத்தில், இந்தத் தொடரில் இருந்து அவர் மீண்டும் தனது திறமையை நிரூபிக்க வேண்டியிருக்கும்.

ருதுர்ஜ் கெய்க்வாட் வாய்ப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருதுர்ஜ் கெய்க்வாட் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பேட்டராக வரவிருக்கும் நாட்களில் தலைமைக் குழுவின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய ஒருவராக அவரது திறமை மீது நிர்வாகம் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது. சமீபத்தில் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அணிக்கு கேப்டனாக இருந்தார். சுப்மன் கில் ஏற்கனவே ஒரு தொடக்க இடத்தை பல ஆண்டுகளாக உறுதிப்படுத்தி வருவதால், இந்த 5 போட்டிகள் கொண்ட தொடர்கள் கெய்க்வாட் மற்றொன்றை எடுக்கத் தயாராக இருக்கிறார் என்பதை நிரூபிக்க ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கலாம்.

கவனம் ஈர்க்கும் ஆரோன் ஹார்டி

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் முன்னணி இளம் வீரரான ஆரோன் ஹார்டி கொடூரமான வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரில் தனது சர்வதேச அறிமுகத்தை பெற்றார். அவர் உயரமானவர் மற்றும் மந்தமான ஆடுகளங்களில் இருந்து கூடுதல் பவுன்ஸ் மூலம் பேட்டர்களை தொந்தரவு செய்யும் ஒருவர். அவர் கேமரூன் கிரீன் போன்ற ஒரு கனமான பந்து வீசக்கூடிய ஒருவரைப் போன்றவர். வரவிருக்கும் தொடரில் இந்தியர்கள் பேட் மற்றும் பந்து இரண்டையும் கவனிக்க விரும்பும் ஒருவர் ஹார்டி.

இந்தியாவின் உத்தேச ஆடும் லெவன்: 

ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார். 

இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (வி.கே.), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார்

குறிப்பு: ராய்ப்பூர் மற்றும் பெங்களூரில் நடைபெறும் கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இணைவார்.

ஆஸ்திரேலியாவின் உத்தேச ஆடும் லெவன்: மேத்யூ வேட் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி, சீன் அபோட், கேன் ரிச்சர்ட்சன், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா

ஆஸ்திரேலியாவின் அணி: மேத்யூ வேட் (கேப்டன்), ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், கேன் ஜம்பா. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment