விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர், 1-1 என டிராவானது. இதைத் தொடர்ந்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலைட் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்திய அணி வீரர்கள் விவரம்: விராட் கோலி, லோகேஷ் ராகுல், முரளி விஜய், புஜாரா, ரஹானே, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், அஷ்வின், பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா
இதில், டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கேப்டன் கோலி உட்பட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நான்கு பேரும் அடுத்தடுத்து அவுட்டாகியுள்ளனர். கோலி 16 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த போது, கல்லி திசையில் நின்றிருந்த உஸ்மான் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
India vs Australia 1st Test Day 1 : பரபரப்பான இப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை நமது இந்தியன்எக்ஸ்பிரஸ் தளத்தில் நீங்கள் காணலாம்.
02:00 PM - அருமையான டிஃபன்ஸ் ஆட்டம் ஆடிய புஜாரா, அட்டகாசமான சதம் விளாசினார். 246 பந்துகளை சந்தித்த அவர், 123 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். இதனால், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்தது.
11:50 AM - அஷ்வின் அவுட்... கம்மின்ஸ் ஓவரில் 25 ரன்னில் நம்ம அஷ்வின் கேட்ச் ஆனார். 76 பந்துகளை சந்தித்து அவர் களத்தில் நின்றது கிரேட்.
11:20 AM - இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்தாலும், புஜாராவின் அழுத்தமான ஆட்டம், இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. 180+ பந்துகளை சந்தித்து, தொடர்ந்து ஆஸி., பவுலர்களுக்கு தண்ணீர் காட்டி வருகிறார்.
08:55 AM - நாதன் லயன் ஓவரில் சிக்ஸ் அடித்த ரோஹித் ஷர்மா, அடுத்த பந்தை மீண்டும் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு ஹாரிஸிடம் கேட்ச் கொடுத்து 37 ரன்களில் வெளியேறினார்.
08:30 AM - இதற்கு முன் 1991/92 சீசனில், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருத்த போது, முதல் டெஸ்ட் போட்டியிலேயே டாஸ் வென்று பேட்டிங் செய்தது. அந்தப் போட்டியின் உணவு இடைவேளையின் போது, இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது இத்தனை வருடங்கள் கழித்து, ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றிருக்கும் இந்திய அணி, அதே போல், உணவு இடைவேளையின் போது நான்கு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்திருக்கிறது.
08:05 AM - லன்ச்சிற்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ரோஹித் - புஜாரா கூட்டணி இந்திய விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்துகிறதா என்று பார்ப்போம்.
07:30 AM - உணவு இடைவேளை வரை இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது.
07:00 AM - லோகேஷ் ராகுலை வெறும் 2 ரன்னில் ஹேசில்வுட் அவுட் செய்தார். தேர்ட் ஸ்லிப்பில் நின்றுக் கொண்டிருந்த ஆரோன் ஃபின்ச்சிடம் கேட்ச் கொடுத்து ராகுல் வெளியேறினார். அதேபோல் முரளி விஜய்யை 11 ரன்னில் ஸ்டார்க் காலி செய்தார். அவர் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரஹானேவை 13 ரன்னில் ஹேசில்வுட் அவுட் செய்தார்.