ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலைடில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாகவே உள்ளது. முதல் இன்னிங்ஸில் புஜாராவின் இன்னிங்ஸ் சேவ் சதத்தால், இந்தியா 250 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அஷ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின், 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து, 151 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 166 ரன்கள் முன்னிலை பெற்றது.
முதல் விக்கெட்டுக்கு முரளி விஜய் – லோகேஷ் ராகுல் ஜோடி 63 ரன்கள் சேர்த்தது. ராகுல் 44, விஜய் 18, கோலி 34 ரன்னிலும் அவுட்டானார்கள். அதிலும், ஆட்டம் முடியும் நேரத்தில் நாதன் லயன் ஓவரில் கேப்டன் கோலி அவுட்டானார்.
இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் ஆறாவது முறையாக, நாதன் லயனிடம் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். டெஸ்டில் அதிக முறை கோலியை வீழ்த்தியது அவர் தான்.
இந்த நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
India vs Australia 1st Test Day 4 : பரபரப்பான இப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நீங்கள் காணலாம்.
02:00 PM - இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. கைவசம் இன்னும் 6 விக்கெட்டுகள் மீதமிருக்கும் நிலையில், அந்த அணி வெற்றிப் பெற 219 ரன்கள் தேவை.
11:20 AM - இந்தியாவை அச்சுறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட பேட்ஸ்மேன் உஸ்மான கவாஜாவை, அஷ்வின் 8 ரன்களில் வெளியேற்றினார்.
10:40 AM - இதோ அடுத்த விக்கெட்... மற்றொரு தொடக்க வீரர் மார்க்ஸ் ஹாரிஸ் விக்கெட்டை ஷமி கைப்பற்றினார்.
10:10 AM - அவுட்... ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச்சை அவுட் செய்து, விக்கெட் வீழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் அஷ்வின். ஃபின்ச் விக்கெட் கீப்பர் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
10:00 AM - 323 ரன்கள் இலக்கை நோக்கி 2ம் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்துள்ளது.
09:00 AM - இந்தியாவின் கடைசி ஐந்து விக்கெட்டுகள் 25 விக்கெட்டுகளில் சரிய, இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
08:30 AM - தற்போதைய இந்திய அணியில் புஜாரா அடுத்த டிராவிட் என்றும், லோ ஆர்டரில் ரஹானே அடுத்த லக்ஷ்மன் என்றே ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இந்த அடிலைட் டெஸ்ட் போட்டியில், 2ம் இன்னிங்ஸில் விராட் கோலி விரைவில் அவுட்டாகிவிட, புஜாரா, ரஹானே இருவருமே அரைசதம் அடித்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமான டார்கெட் செட் செய்ய உதவி புரிந்திருக்கின்றனர். அதிலும், ரஹானே இன்னும் களத்தில் நிற்பதால், சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
08:10 AM - ரிஷப் பண்ட் 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
07:30 AM - அரைசதம் அடித்த புஜாரா 71 ரன்னில் அவுட்டாக, தொடர்ந்து வந்த ரோஹித் ஷர்மா 1 ரன்னில் நாதன் லயன் ஓவரில் வெளியே ஏமாற்றம் அளித்தார்.
07:00 AM - எப்படியாவது 300 - 350 டார்கெட் வைத்துவிட்டால், ஆஸ்திரேலியா வெற்றிப் பெறும் எண்ணத்தில் ஆடாது. டிரா செய்யும் நோக்கத்துடனேயே விளையாடும். அதனைப் பயன்படுத்தி, நமது பவுலர்கள் நெருக்கடி கொடுத்தால், இந்தப் போட்டியில் இந்தியா வெல்ல நல்ல வாய்ப்புள்ளது.