ஆஸ்திரேலிய மண்ணில் அரங்கேறும் பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இந்தத் தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாளை வெள்ளிக்கிழமை முதல் (நவ.22) பெர்த் நகரில் தொடங்கவுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Australia 1st Test Live Score Streaming: When, where to watch Perth Test of Border-Gavaskar Trophy
2014-15 இல் கடைசி வெற்றிக்குப் பிறகு, பேட் கம்மின்ஸின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, சொந்த மண்ணில் அடுத்தடுத்து இரண்டு முறை பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரை பறிகொடுத்துள்ளது. தற்போது மீண்டும் பெற கடுமையாக போராடுவார்கள்.
இதற்கிடையில், ரோகித் சர்மா இல்லாத நிலையில், அவரது வெற்றிடத்தை நிரப்ப இந்தியா போராடி வருகிறது. மேலும், சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடர் ஒயிட்வாஷ் செய்யப்பட்ட சம்பவத்தில் இருந்தும் விரைவில் மீண்டு வர இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்த இருக்கும் நிலையில், இந்திய அணியில் இரண்டு வீரர்கள் தங்களது அறிமுக ஆட்டத்தில் களமாட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியை ஆன்லைனில் நேரலையில் எப்படி பார்க்கலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி எந்த மைதானத்தில் நடக்கிறது?
இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி எப்போது தொடங்கும்?
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை (நவம்பர் 22) வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி (IST) காலை 7:50 மணிக்கு தொடங்க உள்ளது. டாஸ் காலை 7:20 மணிக்கு போடப்படும்.
இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியை எந்த டி.வி-யில் பார்ப்பது?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டி.டி ஸ்போர்ட்ஸ் ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும்.
இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியை எந்த ஓ.டி.டி தளத்தில் பார்ப்பது?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இந்தியாவில் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இரு அணி வீரர்கள் பட்டியல்
இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ், சர்பராஸ் கான், பிரசித் கிருஷ்ணா, ரவீந்திர ஜடேஜா , ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், அபிமன்யு ஈஸ்வரன்.
ஆஸ்திரேலிய அணி: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்காட் போலண்ட்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“