“அப்புறம்… ரெண்டு சிக்ஸ போடுறது” – கம்மின்சை வெறுப்பேற்றிய ரிஷப் பண்ட் (வீடியோ)

தோனி Era-வில் இப்படிப்பட்ட விக்கெட் கீப்பரின் சீண்டல்களை நாம் கேட்டதில்லை

"அப்புறம்... ரெண்டு சிக்ஸ போடுறது" - கம்மின்சை வெறுப்பேற்றிய ரிஷப் பண்ட் (வீடியோ)
"அப்புறம்… ரெண்டு சிக்ஸ போடுறது" – கம்மின்சை வெறுப்பேற்றிய ரிஷப் பண்ட் (வீடியோ)

அடிலைடில் பரபரப்பாக நடந்து முடிந்த இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது.

பேட்ஸ்மேன்களை கூட ஓரளவுக்கு எளிதாக நமது பவுலர்கள் அவுட்டாக்கிவிட்டனர். ஆனால், ஆஸ்திரேலிய Tailenders-களை அவுட் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. விக்கெட்டுகளை வீழ்த்துவதில் இந்தியா தீவிரம் காட்ட, எப்படியாவது நின்று விட வேண்டும் என ஆஸ்திரேலிய Tailenders போராட, அந்த அணியின் அபார டிஃபன்சை ஒரு கிரிக்கெட் ரசிகனாக நம்மால் ரசிக்க முடிந்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பவுலர் பேட் கம்மின்ஸ் பேட்டிங் செய்த போது, அவரை அவுட்டாக்கும் நோக்கில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பேசிய மைக் ஆடியோ வெளியாகியுள்ளது.

அஷ்வின் வீசிய 75வது ஓவரில், ஸ்டெம்புகளுக்கு பின்னால் மிக அருகில் நின்றுக் கொண்டிருந்த ரிஷப் பண்ட், “கமான் Patty, சில சிக்சர்களை விளாசு பார்ப்போம்” , “இன்னும் நீ அடிக்கவேயில்லையா Patty?” , “இங்க விளையாடுறது ரொம்ப கஷ்டம்” என்று சரமாரியாக அவரை சீண்டியிருக்கிறார்.

தோனி Era-வில் இப்படி நாம் எதுவுமே கேட்டதில்லை என்பதால், தற்போதைய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் இந்த சீண்டல்களை ரசிகர்கள் வெகுவாக ரசித்து ஷேர் செய்து வருகின்றனர்.

ஆனால், சோகம் என்னவெனில், கம்மின்ஸ் அதன் பிறகு நீண்ட நேரம் நின்று, நமது பவுலர்களின் பொறுமையை சோதித்து,121 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ரிஷப் பண்ட் கலாய்க்கும் மைக்கின் ஆடியோ இதோ,

India vs Australia முதல் டெஸ்ட் போட்டியின் பரபரப்பான நிமிடங்களை காண இங்கே க்ளிக் செய்யவும்

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India vs australia 1st test rishabh pant pat cummins

Next Story
ஐபிஎல்-2017: மும்பையின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்துமா பஞ்சாப்? இரு அணிகளிடேயே இன்று பலப்பரிட்சை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com