/tamil-ie/media/media_files/uploads/2019/03/a776.jpg)
India vs Australia Live, Ind vs Aus 2nd ODI - இந்தியா அபார வெற்றி
Indiavs Australia 2nd ODI: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று (மார்ச்.5) நடைபெற்றது. இதில், இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 250 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, ஆஸ்திரேலியா 242 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
Aus vsInd 2nd ODI: இந்தியா vs ஆஸ்திரேலியா
09:25 PM - கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், விஜய் ஷங்கர் பவுல் செய்தார். முதல் பந்தில் ஸ்டாய்னிஸ் எல்பிடபிள்யூ ஆக, இரண்டாவது பந்தில் 2 ரன்கள் எடுக்க, மூன்றாவது பந்தில் ஆடம் ஜம்பா போல்டானார். இதனால், இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றது. 46 ரன்களுடன், கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்திய விஜய் ஷங்கர், இன்றைய போட்டியின் ஹீரோவானார்.
09:00 PM - ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்துள்ளது.
06:45 PM - முதல் விக்கெட்டிற்கு 83 ரன்கள் சேர்த்த பின்ச் - கவாஜா ஜோடி அதே 83 ரன்களில் அடுத்தடுத்து வெளியேறியது. பின்ச் 37 ரன்களிலும், கவாஜா 38 ரன்களிலும் அவுட்டானார்கள்.
06:15 PM - ஆஸ்திரேலியா தனது இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது. ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா இருவரும் களத்தில் நிதானமாக விளையாடி வருகின்றனர்.
05:15 PM - துரத்தும் 'ரன் அவுட்' தொல்லை! அட்டகாசமான வாய்ப்பை இழந்த விஜய் ஷங்கர்! (வீடியோ)
05:00 PM - இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 116 ரன்களும், விஜய் ஷங்கர் 46 ரன்களும் எடுத்தனர்.
04:30 PM - 40வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார் கேப்டன் விராட் கோலி.
Take a bow #KingKohli ????????#INDvAUSpic.twitter.com/x5vvfXhA1d
— BCCI (@BCCI) 5 March 2019
03:45 PM - இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேதர் ஜாதவ், 11 ரன்களில் கேட்ச் ஆனார். தொடர்ந்து, தோனி முதல் பந்திலேயே ஆடம் ஜம்பா ஓவரில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
03:40 PM - மூன்று விக்கெட்டுகள் சரிந்த பிறகு, கேப்டன் விராட் கோலியுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த விஜய் ஷங்கர் 46 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
02:45 PM - மேக்ஸ்வெல் ஓவரில் தவான் 21 ரன்களில் எல்பி ஆக, லயன் ஓவரில் அம்பதி ராயுடு 18 ரன்கள் எல்பிடபிள்யூ ஆனார். ஸ்பின் டிராக், அதன் வேலையை காட்டத் தொடங்கிவிட்டது.
02:00 PM - இந்திய மண்ணில் முதன்முறையாக ரோஹித் ஷர்மா டக் அவுட் ஆனார். பேட் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே, தேர்ட் மேனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
01:02 PM - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். Red Soil என்று அழைக்கப்படும் இந்த பிட்ச்-ல் இந்தியா பேட்டிங் செய்கிறது.
#TeamIndia Playing XI for the 2nd ODI #INDvAUSpic.twitter.com/nb5LnEJvG0
— BCCI (@BCCI) 5 March 2019
இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் ஆடிய அதே அணி தான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.