Advertisment

India vs Australia 2nd ODI: இந்தியா பதிலடி வெற்றி: நெருங்கி வந்த ஆஸ்திரேலியாவை பவுலர்கள் முடக்கினர்

India Vs Australia 2019 Live Score Updates: இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி லைவ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs Australia 2nd ODI Live Score

India vs Australia 2nd ODI Live Score

India vs Australia 2nd ODI Scorecard: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisment

ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

தோனி பெயர் இல்லாத பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்; ‘தல’யை இப்படியா வழியனுப்புவது? ரசிகர்கள் ஆதங்கம்!

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா நிர்ணயித்த 256 ரன்கள் இலக்கை, 37.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது. தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் (128 ரன்கள்), கேப்டன் ஆரோன் பின்ச் (110 ரன்கள்) ஆகியோர் சதம் அடித்து இந்தியாவுக்கு எதிராக மாபெரும் வெற்றியை பதிவு செய்தனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களாலும், சுழற்பந்து வீச்சாளர்களாலும் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (ஜன.17) நடைபெற்றது.

இந்தப் போட்டியில், காயம் காரணமாக ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மனிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கடந்த போட்டியைப் போல பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்களைக் குவித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 96 ரன்களும், கே.எல்.ராகுல் 80 ரன்களும், கேப்டன் விராட் கோலி 78 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து, 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் குவித்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 98 ரன்கள் குவித்தார். இந்திய அணியில், ஷமி 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ், சைனி, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தனர்.

மேலும், குல்தீப் யாதவ் இந்தப் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியில் மிக வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்துவிச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

Live Blog

India vs Australia 2nd ODI Score: இந்தியா - ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி



























Highlights

    21:38 (IST)17 Jan 2020

    ஆஸ்திரேலிய அணி 304 ரன்களுக்கு ஆல் அவுட்; 36 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

    முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது. 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    21:35 (IST)17 Jan 2020

    கடைசி விக்கெட்டாக ஆடம் ஜம்பாவை அவுட் ஆக்கிய பும்ரா

    போட்டியின் கடைசி ஓவரான 50வது ஓவரை வீசிய பும்ரா கடைசி விக்கெட்டாக 6 ரன் எடுத்திருந்த ஆடம் ஜம்பாவின் விக்கெட்டை வீழ்த்தி வெற்றி பெறச் செய்தார்.

    21:28 (IST)17 Jan 2020

    சைனி பந்தில் மிட்செல் ஸ்டார்க் அவுட்

    ஆஸி அணியின் மிட்செல் ஸ்டார்க் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சைனி பந்துவீச்சில் கே.எல். ராகுலிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார்.

    21:26 (IST)17 Jan 2020

    சைனி பந்தில் ஆஷ்டன் அகர் அவுட்

    ஆஸி அணியின் ஆஷ்டன் அகர் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சைனி பந்துவீச்சில் எல்பிடபில்யூ முறையில் அவுட் ஆனார்.

    21:14 (IST)17 Jan 2020

    ஷமி பந்தில் வந்த வேகத்திலேயே டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய கம்மின்ஸ்

    ஆஸி அணியின் வீரர் கம்மின்ஸ் வந்த வேகத்திலேயே ஷமி பந்தில் கிளீன் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

    21:09 (IST)17 Jan 2020

    ஆஷ்டர்ன் டர்னர் ஆட்டத்தை திருப்புவார் என்று பார்த்தால் பெவிலியன் திரும்பிவிட்டார்

    ஆஸி அணியின் ஆஷ்டர் டர்னர் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷமி பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார். ஆட்டத்தின் போக்கை திருப்புவார் என்று பார்த்தால் பெவிலியன் திரும்பிவிட்டார் ஆஷ்டன் டர்னர்.

    21:00 (IST)17 Jan 2020

    இரண்டு ஆஷ்டனும் போட்டியின் போக்கை திருப்புவார்களா?

    ஆஸி அணியின் ஆஷ்டன் அகர் 20 ரன்களுடனும் ஆஷ்டர்ன் டர்னர் 13 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். ஆஸிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த இரண்டு ஆஷ்டன்களும் போட்டியின்போக்கை திருப்புவார்களா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    20:40 (IST)17 Jan 2020

    ஒரே ஓவரில் 2 விக்கெட் -ஆஸ்திரேலியாவை மிரட்டிய குல்தீப்

    குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை மிரட்டியுள்ளார். 18 ரன்களில் அலேக்ஸ் கேரியையும் 98 ரன்களில் ஸ்டீவ் ஸ்மித்தையும் அவுட் ஆக்கினார். அதிலும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித்தை கிளீன் போல்ட் ஆக்கினார்.

    20:36 (IST)17 Jan 2020

    சதம் அடிப்பார் என்று பார்த்தால் குல்தீப் பந்தில் 98 ரன்களில் கிளீன் போல்ட் ஆன ஸ்மித்

    இந்த போட்டியில் இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவந்த ஸ்டீவ் ஸ்மித் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 98 ரன்கள் எடுத்திருந்தபோது குல்தீப் யாதவ் பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.

    20:30 (IST)17 Jan 2020

    அலெக்ஸ் கேரி அவுட்

    ஆஸி அணியின் அலெக்ஸ் கேரி 18 ரன்கள் எடுத்த நிலையில், குல்தீப் யாதவ் வீசிய பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    20:08 (IST)17 Jan 2020

    மர்னஸ் அவுட்

    46 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடி வந்த ஆஸி அணியின் மர்னஸ் ஜடேஜே வீசிய பந்தில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    19:53 (IST)17 Jan 2020

    ஒரு டி.ஆர்.எஸ் வீணாப் போச்சா?

    ரவீந்திர ஜடேஜா வீசிய ஓவரில் முன்னெ வந்து தடுத்து ஆடிய ஸ்மித் கால்காப்பில் பட்டதும் இந்திய அணி வீரர்கள் எல்பிடபில்யூ கேட்டனர். ஆனால், அம்பயர் விக்கெட் கொடுக்கவில்லை இதையடுத்து டிஆர்எஸ் முறையில் பார்த்ததில் பந்து லேசாக பேட்டில் உரசியுள்ளது தெரியவந்தது. அதனால், விக்கெட் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால், இந்திய அணியின் ஒரு டி.ஆர்.எஸ். வீணாப்போச்சு.

    19:46 (IST)17 Jan 2020

    வெற்றி இலக்கு 341 - இந்திய அணிக்கு பயம் காட்டும் ஸ்மித் அரை சதம்

    ஆஸ்திரேலிய அணியின் ஒன் டவுன் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் கடந்து ஆடிக்கொண்டிருகிறார். இந்த போட்டியில் ஸ்மித் இந்திய அணிக்கு பயம் காட்டும் வகையில் ஆடிவருகிறார்.

    19:41 (IST)17 Jan 2020

    முதல் போட்டியில் இந்திய அணியை கலக்கிய வார்னர், ஃபின்ச் இரண்டு பேருமே அவுட்

    முதல் போட்டியில் இந்திய அணியின் பந்துவிச்சை நாலாபுறமும் சிதறடித்து கலக்கிய ஆஸ்திரேலிய அணியின் வார்னர், ஃபின்ச் இரண்டு பேருமே விக்கெட்டை இழந்துள்ளனர். 

    19:06 (IST)17 Jan 2020

    மேட் பாய் பின்ச் அவுட்...

    மற்றொரு தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச் 48 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா ஓவரில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.

    ஆஸ்திரேலியா 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்துள்ளது.

    18:25 (IST)17 Jan 2020

    வார்னர் அவுட்

    வார்னர் 15 ரன்களில், ஷமி ஓவரில் மனீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

    ஒரு கண்டம் காலி!!

    18:07 (IST)17 Jan 2020

    ஆஸ்திரேலிய ஓப்பனர்கள் களத்தில்...

    ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் களமிறங்கியுள்ளனர். 

    கடந்த போட்டியில் இருவரும் அவுட்டே ஆகாமல், இந்திய பவுலர்களை அழ வைத்து, தங்கள் அணியை வெற்றிப் பெற வைத்தார்கள். 

    இன்று என்ன செய்யப் போகிறார்களோ!!

    17:15 (IST)17 Jan 2020

    341 ரன்கள் இலக்கு

    இறுதிக் கட்டத்தில் லோகேஷ் ராகுல் 52 பந்துகளில் 80 ரன்கள் விளாச, இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்துள்ளது. 

    ஆடம் ஜம்பா 3  விக்கெட்டுகளையும், கேன் ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    16:48 (IST)17 Jan 2020

    மனீஷ் பாண்டே அவுட்

    இந்தியாவின் லோ ஆர்டர் மீண்டும் சொதப்பல்ஸ்...

    கோலி அவுட்டான பிறகு, மனீஷ் பாண்டே வெறும் 2 ரன்களில் ரிச்சர்ட்சன் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    16:39 (IST)17 Jan 2020

    கோலி அவுட்

    கேப்டன் விராட் கோலி, 76 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்த போது, ஆடம் ஜம்பா ஓவரில், ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும். 

    16:13 (IST)17 Jan 2020

    கோலி அரைசதம்

    ஐயரின் விக்கெட்டை விரைவில் இழந்தாலும், கோலி தனது வேகத்தை குறைக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எக்ஸலென்ட் டார்கெட் நிர்ணயிக்க வேண்டும் என்ற முனைப்பு கோலியின் பேட்டிங்கில் தெளிவாக தெரிகிறது. 

    56வது ஒருநாள் அரைசதத்தை நிறைவு செய்து மெல்லிய ஸ்மைலுடன் கோலி....

    15:53 (IST)17 Jan 2020

    ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்....

    ஆடம் ஜம்பா ஓவரில் 7 ரன்களில் ஷ்ரேயாஸ் ஐயர் போல்டாகி வெளியேறினார்.

    15:52 (IST)17 Jan 2020

    செஞ்சுரி மிஸ்...

    ஷிகர் தவான்,  96 ரன்களில் ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதில் 13 பவுண்டரியும், 1 சிக்ஸரும் அடக்கம். 

    15:23 (IST)17 Jan 2020

    Yeah... It's true.... இந்தியா 150-1

    இந்திய அணி 25 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. 

    தவான் 70 ரன்களுடனும், கோலி 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

    எப்படியாச்சும் 330+ அடிச்சுருங்கப்பா!!

    14:58 (IST)17 Jan 2020

    100 கடந்த இந்தியா

    இந்திய அணி 18 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 44  ரன்களுடனும், கோலி 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    14:44 (IST)17 Jan 2020

    ரோஹித் அவுட்

    அரைசதத்தை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருந்த ரோஹித் ஷர்மா. 44 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்த போது எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதில் ஆறு பவுண்டரிகள் அடங்கும்.

    ஒன் டவுன் பேட்ஸ்மேனாக விராட் கோலி....

    14:23 (IST)17 Jan 2020

    64-0

    11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 30 ரன்களுடனும், தவான் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    13:37 (IST)17 Jan 2020

    இந்தியா பிளேயிங் XI

    ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ்,

    13:31 (IST)17 Jan 2020

    இந்தியா பேட்டிங்

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். 

    இந்திய அணியில், ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக மனீஷ் பாண்டேவும், ஷர்துள் தாகூருக்கு பதிலாக நவ்தீப் சைனியும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    India Vs Australia
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment