மேக்ஸ்வெல் ‘ஒன் மேன் ஷோ’! இந்திய மண்ணில் முதல் டி20 கோப்பை வென்ற ஆஸ்திரேலியா!

3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

By: Updated: February 27, 2019, 10:34:10 PM

India vs Australia 2nd T20: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

Aus vs Ind 2nd T20 Live Score: இந்தியா vs ஆஸ்திரேலியா லைவ்

22:26 PM – மேக்ஸ்வெல்லின் அபார இன்னிங்ஸ் காரணமாக, ஆஸ்திரேலியா 19.4வது ஓவரில் 194 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றிப் பெற்றது. இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவின் முதல் டி20 தொடர் வெற்றி இதுவாகும்.

22:18 PM – மேக்ஸ்வெல் தனது மூன்றாவது டி20 சதத்தை பூர்த்தி செய்தார்.

22:10 PM – 40 பந்துகளில் 6 பிரம்மாண்ட சிக்ஸர்களுடன் 76 ரன்கள் குவித்து ஆக்ரோஷம் காட்டி வரும் மேக்ஸ்வெல்லை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறி வருகின்றனர்.

09:45 PM – 13 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது.

08:55 PM – ஆஸ்திரேலியா தனது இன்னிங்சை தொடங்கியது.

08:50 PM – சர்வதேச டி20 போட்டிகளில் அதிக பவுண்டரி அடித்த வீரர்களில் விராட் கோலி, தில்ஷனுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.

223 விராட் கோலி/ தில்ஷன்
218 முஹம்மத் சாஷத்
207 ரோஹித் ஷர்மா
200 மார்டின் கப்தில்

08:40 PM – கடைசி பந்தில் சிக்ஸருடன் விராட் ஆட்டத்தை முடிக்க, இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. கேப்டன் விராட் கோலி 38 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். இதில் ஆறு சிக்ஸர்கள் அடங்கும்.

08:35 PM – 23 பந்தில் 40 ரன்கள் எடுத்த தோனி, கம்மின்ஸ் வீசிய கடைசி ஓவரில் கேட்ச் ஆனார்.

08:18 PM – கோல்டர் நைல் ஓவரில், கேப்டன் விராட் கோலி ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

08:13 PM – தோனி – கோலி இணைந்து பார்ட்னர்ஷிப் கட்டமைக்க முயற்சித்து வருகிறார்கள். ஆனால், இந்தியாவால் 170+ டார்கெட் வைக்க முடியுமா என்பது பெரிய ?.

07:56 PM – ரிஷப் பண்ட் லாங் ஆன்-ல் பவுண்டரி அடிக்க நினைத்து தூக்கி அடிக்க, ரிச்சர்ட்சனின் அபாரமான கேட்ச்சால் ஒரே ரன்னில் வெளியேறினார்.

07:50 PM – 24 பந்தில் 14 ரன்கள் எடுத்து தவான் கேட்ச் ஆனார். சுத்தமாக அவரது கனெக்ட் ஒர்க் அவுட் ஆகவில்லை. முதல் போட்டியில் தோனியின் கனெக்ட்லெஸ் ஆட்டத்தை, இப்போட்டியில் தவானிடம் பார்க்க முடிந்தது.

07:35 PM – லோகேஷ் ராகுல் நான்கு சிக்ஸர்களை பறக்கவிட்டு, இந்தியாவின் அதிரடி இன்னிங்சை தொடக்கி வைத்தார். ஆனால், 47 ரன்களில், கேட்ச் ஆகி, அரைசதத்தை தவறவிட்டார்.

07:15 PM – இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நிதானமாக பேட்டிங் செய்து வருகின்றனர். தொடக்கத்தில் விக்கெட் இழக்கக் கூடாது என்பதில் முனைப்புடன் ஆடி வருகின்றனர்.

07:00 PM – இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது

06:45 PM – இந்திய அணி வீரர்கள் விவரம்

ஷிகர் தவா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தோனி, விஜய் ஷங்கர், க்ருனல் பாண்ட்யா, சாஹல், பும்ரா, சித்தார்த் கவுல்

06:33 PM – டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:India vs australia 2nd t20 live cricket score updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X