When and Where to Watch India vs Australia 2nd T20 Live Telecast: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி நாளை(பிப்.27) பெங்களூருவில் நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில், கடந்த 24ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் பேட்டிங் செய்து வெறும் 126 ரன்கள் எடுத்த இந்திய அணி, பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டது எனலாம். இருப்பினும், கடைசியில் உமேஷ் யாதவ் ஓவரில் 14 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா த்ரில் வெற்றிப் பெற்றது.
நியூசிலாந்து சீரிஸில் இருந்தே தொடரும் ரோஹித்தின் தடுமாற்றம், மிடில் ஆர்டர் சொதப்பல், தோனியின் மந்தமான பேட்டிங் போன்றவை இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனை களைய வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், நாளை(பிப்.27) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இவ்விரு அணிகள் இடையேயான இரண்டாவது போட்டி நடைபெறுகிறது.
இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் இப்போட்டியை லைவாக காணலாம். ஆன்லைனில் ஹாட்ஸ்டாரில் காணலாம். தவிர, தமிழ்.இந்தியன்எக்ஸ்பிரஸ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை கண்டுகளிக்கலாம்.
இந்திய டி20 அணி:
விராட் கோலி(C), ரோஹித் ஷர்மா (vc), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், எம் எஸ் தோனி (WK), க்ருனல் பாண்ட்யா, விஜய் ஷங்கர், யுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மாயன்க் மார்கண்டே.