Advertisment

திருவனந்தபுரத்தில் மழை: இந்தியா- ஆஸ்திரேலியா 2-வது டி20 முழுமையாக நடைபெறுமா?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற உள்ளது.

author-image
WebDesk
New Update
India Australia Tiruvendram

திருவனந்தபுரம் மைதானம்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், தற்போது அங்கு கனமழை பெற்று வருவதால், திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

சமீபத்தில் நடந்த உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் விசாகப்பட்டியனத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து 2-வது டி20 போட்டி நாளை (நவம்பர் 26) கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் திருவனந்தபுரத்தில் தங்கியுள்ள நிலையில், இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது. கடலோர பகுதியான திருவனந்தபுரத்தில், தற்போது கனமழை பெய்யு வரும் நிலையில், நாளையும் இதே நிலை தொடரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் வானிலை மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, போட்டி நடைபெறும் நேரத்தில் மழைக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் இதனால் ரசிகர்கள் முழு ஆட்டத்தை ரசிக்க முடியும் முடியும். இருப்பினும், விளையாட்டின் ஆரம்பம் வானிலை மற்றும் கிரீன்ஃபீல்ட் ஸ்டேடியம் எவ்வளவு விரைவாக ஈரப்பதத்தை வெளியேறுகிறது என்பதைப் பொறுத்து அமையும். பகலில் அங்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மாலை நேரத்தில் வானம் தெளிவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி 2-வது போட்டியிலும் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் அணியில் மாற்றம் இருக்காது. அதே சமயம் கடந்த போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு சரியாக அமையவில்லை என்றாலும் பேட்டிங்கில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இறுதிக்கட்டத்தில் ரின்கு சிங் அதிரடியாக விளையாடி வெற்றி இலக்கை எட்டினர். மறுபுறம் ஆஸ்திரேலியா தனது வரிசையில் இரண்டு மாற்றங்களைச் செய்யலாம். 2023 உலகக் கோப்பையின் இறுதி ஹீரோ டிராவிஸ் ஹெட், சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஆகியோர் உள்ளே வர, மேத்யூ ஷார்ட் மற்றும் தன்வீர் சங்கா ஆகியோர் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Vs Australia Thiruvananthapuram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment