இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ள நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. ஆசியகோப்பை தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி அடுத்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி உள்ளது.
அதன்படி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்கள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் செப்டம்பர் 22-ந் தேதி தொடங்குகிறது. செப் 24-ந் தேதி 2-வது போட்டியும், செப் 27-ந் தேதி 3-வது போட்டியும் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 2 போட்டிகள் கொண்ட அணியில், கேப்டன் ரோகித்சர்மா, விராட்கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2 வருட இடைவெளிக்கு பிறகு சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் மீண்டும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.
3-வது போட்டிக்கான அணியில், கேப்டன் ரோகித் சர்மா ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்புவார். ஆனால் இந்த தொடரில் முன்னாள் கேப்டன் விராட்கோலிக்கு முழுவதுமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 போட்டிக்கான இந்திய அணி
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஆர்.ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜே பும்ரா, எம்.சிராஜ், எம்.ஷமி, திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, ஆர்.அஸ்வின், வாஷிங்டன் சுந்தர்
3வது ஒருநாள் போட்டிக்கான அணி:
ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஆர்.ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜே பும்ரா, எம்.சிராஜ், எம். ஷமி, ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (உடற்தகுதிக்கு உட்பட்டது), ஆர் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“