India vs Australia 3rd ODI Scorecard:இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 3வது ஓருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
சுதாரித்த இந்தியா : முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் சுதாரித்துக்கொண்ட இந்திய வீரர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடியதால், இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் தொடர் சமநிலையில் உள்ளது. இதனிடையே , மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, பெங்களூருவில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த போட்டியில் விறுவிறுப்பு பஞ்சமிருக்காது.
இந்த போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஹாட் ஸ்டார் உள்ளிட்டவைகளில் கண்டு மகிழலாம்
India Vs Australia 2019 Live Score Updates.. : பெங்களூருவில் இன்று மேகமூட்டமாக காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. எனவே ரசிகர்கள் எவ்வித பயமுமின்றி போட்டியை கண்டு ரசிக்கலாம்.
India Vs Australia 2019 Live Score Updates.. : இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் கடைசியாக இங்கு விளையாடிய 2 போட்டிகளில் 709, 647 ரன்கள் எடுத்துள்ளன. இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், இரண்டாவதாக பவுலிங் செய்யும் அணிக்கு சிக்கல் ஏற்படலாம்.
Highlights