ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா சாதனை: ஒரே டூரில் டெஸ்ட், ஒருநாள் தொடரில் முதல் முறை வெற்றி!

India vs Australia 3rd ODI: 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது

India vs Australia 3rd ODI Live Cricket Score: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று (ஜன.18) தொடங்கியது. நீண்ட சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய அணியின் ஆஸ்திரேலிய தொடருக்கு இன்று தான் கிளைமேக்ஸ். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.  டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது. அம்பதி ராயுடு நீக்கப்பட்டு கேதர் ஜாதவும், சிராஜ் நீக்கப்பட்டு தமிழக வீரர் விஜய் ஷங்கரும், குல்தீப் நீக்கப்பட்டு சாஹலும் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இத்தொடரில், தனது மூன்றாவது அரைசதத்தை தோனி பூர்த்தி செய்தார். நின்று வெற்றியை தேடிக் கொடுத்துவிட்டால் கொண்டாட்டம் தான்!.

இந்திய நேரப்படி இன்று காலை 7.50 மணிக்கு போட்டி தொடங்கியது. இதன் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டினை உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நேரடியாக கண்டு களிக்கலாம்.

04:40 PM – ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவத்திலான கிரிக்கெட்டிலும் கோப்பையை வென்ற முதல் இந்திய கேப்டன் எனும் பெருமையை கோலி பெறுகிறார். டி20ல் 1-1 என டிரா, டெஸ்ட் தொடரில் 2-1, ஒருநாள் தொடரில் 2-1 என மூன்று வடிவ கோப்பையையும் விராட் வென்றுள்ளார்.

04:13 PM – இந்திய அணி 49.2வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் 2-1 என ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.

04:07 PM – கேதர் ஜாதவ் 52 பந்தில் அரைசதம் அடித்தார். இக்கட்டான தருணத்தில் அணிக்கு சிறப்பாக பங்களித்துள்ளார்.

03:45 PM – இந்திய அணிக்கு, கைக்கு எட்டும் தூரத்தில் வெற்றி உள்ளது.

03:05 PM – இத்தொடரில், தனது மூன்றாவது அரைசதத்தை தோனி பூர்த்தி செய்தார். நின்று வெற்றியை தேடிக் கொடுத்துவிட்டால் கொண்டாட்டம் தான்!.

02:55 PM – தோனியும், கேதர் ஜாதவும் களத்தில் ஆடி வருகின்றனர். தேவைப்படும் பந்தும், ரன் விகிதமும் கிட்டத்தட்ட சரிசம அளவில் இருப்பதால், ஆட்டம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.

02:25 PM – கேப்டன் விராட் கோலி 62 பந்தில் 46 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். ரிச்சர்ட்சன் பந்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

01:48 PM – 20 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்துள்ளது. தோனியும், கோலியும் களத்தில் உள்ளனர்.

01:30 PM – ஸ்டாய்னிஸ் ஓவரில் தவான் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 46 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். 59 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறி வருகிறது.

01:05 PM – 10 ஓவர்கள் முடிவில் இந்தியா 26-1.

12:48 PM – 17 பந்துகளுக்கு 9 ரன்கள் எடுத்த ரோஹித் ஷர்மா, சிடில் ஓவரில் ஸ்லிப்பில் நின்ற மார்ஷிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.

12:45 PM – 5 ஓவர்கள் முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது.

12:25 PM – இந்தியா தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. தொடக்க வீரர்களாக ரோஹித், தவான் களமிறங்கி உள்ளனர். 230 ரன்களை சேஸிங் செய்யுமா?

12:15 PM – ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் பவுலர்களின் சிறந்த பந்துவீச்சு ,

6/42 அஜித் அகர்கர் v ஆஸ்திரேலியா, மெல்போர்ன், 2004
6/42 சாஹல் v ஆஸ்திரேலியா, மெல்போர்ன், 2019 *
6/43 மிட்சல் ஸ்டார்க் v இந்தியா, மெல்போர்ன், 2015
6/45 க்ரிஸ் வோக்ஸ் v ஆஸ்திரேலியா, பிரிஸ்பேன், 2011

11. 50 AM : 230 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா. முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தில் இந்திய வீரர் சஹால் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

11.30 AM : களத்தில் இறங்கிய சில நேரத்திலேயே ரிச்சர்ட்சன் ஆட்டம் இழந்துள்ளார். பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் தன்னுடைய அரை சதத்தை நிறைவு செய்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளார். சஹால் இன்று 4 விக்கெட்டிகளை கைப்பற்றியுள்ளார்.

10:45 AM : 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலிய அணி. 34.5 ஓவர்கள் முடிவில் 161 ரன்களுக்கு 6 விக்கெடுகளை இழந்துள்ளது. கெலன் மேக்ஸ்வெல் தன்னுடைய ஆட்டத்தை இழந்து பெவிலியன் திரும்பினார். பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் ஜெயே ரிச்சர்ட்சன் களத்தில் உள்ளனர்.

10:15 AM :  தன்னுடைய ,முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார் சல்ஹால். ஆஸ்திரேலியா 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷௌன் மார்ஷ் வெளியேறினார்.

அதன் பின்பு உஸ்மான் கவாஜா தன்னுடைய விக்கெட்டை சல்ஹாலிடமே பறிகொடுத்தார். தற்போது ஆஸ்திரேலிய அணி 101 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துள்ளது.

10:00 AM : புவனேஷ்வர் குமார் முதல் இரண்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே 1-1 என்ற சமநிலையில் இரு நாடுகளும் உள்ளன. இந்த ஆட்டத்தின் முடிவு இந்த தொடரின் வெற்றியை நிர்ணயிக்கும்.

9:30 AM : தற்போது களத்தில் ஹௌன் மார்ஷ் மற்றும் உஸ்மான் கவஜா விளையாடி வருகின்றார்கள்.

09:00 AM : புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி தங்களின் சிறப்பான பவுலிங்கால் முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி வீரர்களை திக்குமுக்காட செய்துள்ளனர்.

8.30 AM : ஆஸ்திரேலிய அணி வீரர் ஆலெக்ஸ் கேரி சொற்ப ரன்கள் மட்டுமே பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார்.

07:55 AM – ஆட்டம் தொடங்கி 2 பந்துகள் மட்டும் வீசப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டதால் நிறுத்தப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India vs australia 3rd odi live

Next Story
“என்னில் பாதி நீ” – காதலியிடம் உருகும் ரிஷப் பண்ட்! அடுத்த கிரிக்கெட் லவ் ஜோடி ரெடி!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com