India vs Australia, 3rd ODI, Strongest Playing 11 Tamil News: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தொடரை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி போட்டி சென்னையில் சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நாளை புதன்கிழமை நடைபெறுகிறது. முன்னதாக மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மும்பையில் நடந்த ஆட்டத்தில் தோல்வியுற்று இருந்தாலும் விசாகப்பட்டினத்தில் எழுச்சி கண்டது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீச்சில் மிரட்டி எடுத்தனர். அவர்களது பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்காத இந்தி வீரர்கள் 7 பேர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், சீன் அபோட் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் முறையே 5, 3 மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
இந்திய வீரர்களில் முன்னாள் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 35 பந்தில் 31 ரன் எடுத்தார், அக்சர் படேல் ஒரு பந்தில் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மிடில் ஆர்டர் பேட்டர் சூர்யகுமார் யாதவ் தொடரில் தொடர்ந்து இரண்டாவது கோல்டன் டக் ஆகி வெளியேறினார்.
இந்தியாவுக்கான வேதனை அதோடு நிற்கவில்லை. ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் 11 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தினர். இதனால் இந்தியா மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இந்த இறுதியில் இந்திய மண்ணில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், இந்தியாவின் இந்த மோசமான தோல்வி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் 189 ரன்களை சேஸ் செய்யும் போது இந்தியா 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய டாப் மற்றும் மிடில் ஆர்டர் சரிந்துள்ளது. மேலும், மீண்டும் ஒருமுறை ஸ்விங் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சுக்கு எதிராக போராடியது அப்பட்டமாக தெரிந்தது. தவிர, அந்தப் போட்டியில் இந்தியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. ஆஸ்திரேலியாவில் ஆடம் ஜம்பாவில் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இருந்தார். அப்படியானால், இந்தியா சூழலை கணிக்க தவறிவிட்டதா? ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்கள் மீது நம்பிக்கை இல்லாததால் இந்தியா கூடுதல் பந்துவீச்சு ஆல்ரவுண்டருடன் விளையாடுகிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் 3வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாகவே பதில் சொல்லப்பட வேண்டும்.
இந்தியா முதல் ஒருநாள் போட்டியில் ஷர்துல் தாக்கூருடன் கூடுதல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக விளையாடியது. அதே 2வது போட்டியில் அக்சர் படேலை சேர்த்தது. முதல் இரண்டு போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க்கின் பரபரப்பான பந்துவீச்சிற்கு இந்தியா அதன் முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனவே, இந்தியாவின் எக்ஸ்பிரஸ் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கை அணி நிர்வாகம் ஆடும் லெவனில் சேர்க்குமா?.
சூரியாவுக்கு மற்றொரு வாய்ப்பு
காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அணியில் வேறு எந்த மிடில் ஆர்டர் பேட்டர் இல்லாத நிலையில், ஆடும் லெவனில் சூரியகுமாரின் இடம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லை. 2வது ஒருநாள் போட்டியில் ஆடும் லெவனில் இல்லாத ஒரே ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் இஷான் கிஷன் மட்டுமே. முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் இல்லாத நிலையில், அவர் ஷுப்மான் கில் உடன் தொடக்க வீரராக களமாடும் வாய்ப்பைப் பெற்றார். ஆனால் அவரால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை மற்றும் மூன்று ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதைப் பொருட்படுத்தாமல், ரோகித் சூரியகுமாரை ஆதரித்து, 'தனது தகுதியை நிரூபிக்க அவருக்கு நீண்ட ஓட்டத்தை கொடுப்போம்' என்று கூறினார்.
இந்திய அணி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இயல்பாகத் தன்னைத் தேர்ந்தெடுத்து 2 முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். அவை, கூடுதல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டருக்குப் பதிலாக உம்ரான் மாலிக் (ஷர்துல் மற்றும் அக்சர்) அல்லது 3வது ஸ்பின் விருப்பமாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்ஸருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரை ஆடலாம். ரவீந்திர ஜடேஜா மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளதால், டாப் ஆர்டரில் பேட் செய்யக்கூடிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஏற்கனவே இந்தியாவிடம் உள்ளார். வாஷிங்டனைச் சேர்ப்பது இந்தியாவின் சுழல் தாக்குதலில் பல்வேறு மாறுபாடுகளை வழங்க அதிகரிக்கும் மற்றும் பேட்டிங் செய்வதற்கான வீரர்கள் வரிசை நீண்டதாக இருக்கும். கூடுதலாக, வாஷிங்டன் சுந்தர் உள்ளூர் வீரர். அவரது மைதானத்தை கணிக்கும் திறன் இந்தியாவுக்கு அதிகம் பலம் சேர்க்கும்.
நேருக்கு நேர்
சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 7-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. ஆஸ்திரேலிய அணி இங்கு 5 ஆட்டத்தில் ஆடி அதில் 4-ல் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தியா vs ஆஸ்திரேலியா: 3வது ஒருநாள் போட்டி, சென்னை
இரு அணிகளின் உத்தேச லெவன் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:
இந்தியா
ரோகித் சர்மா (கேப்டன்). சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், முகமது சிராஜ், முகமது ஷமி.
ஆஸ்திரேலியா
டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.