Advertisment

IND vs AUS 3rd T20 Score: ருதுராஜ் சதம் வீண்... மேக்ஸ்வெல் அதிரடி சதம்... ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
India vs Australia 3rd T20 match Live Score updates Guwahati in tamil

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டி20 போட்டி: இன்று மோதல்

India Vs Australia:  இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி 2-0 என்கிற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. 

Advertisment

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். 

தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து இஷான் கிஷன் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ருதுராஜ் 52 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அடித்து விளையாடிய ருதுராஜ் 57 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். திலக் வர்மா 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 222 ரன் எடுத்தது. 

இதையடுத்து, 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹார்டி களமிறங்கினர். ஹார்டி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து, டிராவிஸ் ஹெட் 35 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த இங்க்லிஸ் 10 ரன்களும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 17 ரன்களும், டிம் டேவிட் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகி வெளியேறினார்கள்.

ஆனால், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 47 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். கடைசி ஒவரில் வெற்றி பெற 21 ரன்கள் தேவைப்பட்டநிலையில் அதிரடியில் இறங்கிய மேக்ஸ்வெல் சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் மேக்ஸ்வெல் 104 (48) ரன்களும், மேத்யூ வேட் 28 (16) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

ஆஸ்திரேலியா அணி 20 ஒவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்படி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Australia Live Score, 3rd T20

  • Nov 28, 2023 22:47 IST
    ருதுராஜ் சதம் வீண்... தனி ஆளாக போராடி கிளென் மேக்ஸ்வெல் அதிரடி சதம்... ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி

    ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டின் அதிரடி சதம் வீணானது. தனி ஆளாக போராடிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடி சதம் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.



  • Nov 28, 2023 22:43 IST
    கிளென் மேக்ஸ்வெல் அதிரடி சதம்

    அதிரடியாக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் 19.5 ஓவரில் 47 பந்துகளில் 10ஒ ரன்கள் எடுத்து அதிரடி சதம் அடித்தார். 



  • Nov 28, 2023 22:37 IST
    கிளென் மேக்ஸ்வெல் அதிரடி அரைசதம்

    அதிரடியாக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் 14.4 ஓவரில் 28 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அதிரடி அரைசதம் அடித்தார். 



  • Nov 28, 2023 22:08 IST
    டிம் டேவி டக் அவுட்

    டிம் டேவிட்  13.3 ஓவரில் ரவி பிஷ்னோய் பந்தில் சூர்யகுமார் இடம் கேட்ச் கொடுத்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வந்த வேகத்திலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். அடுத்து மேத்யூ வேட் பேட்டிங் செய்ய வந்தார். 

    ஆஸ்திரேலிய அணி 13.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்துள்ளது.



  • Nov 28, 2023 22:04 IST
    நிதானமாக விளையாடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் அவுட்

    நிதானமாக விளையாடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 21 பந்துகளில் 17 ரன் எடுத்திருந்த நிலையில், 12.6 ஓவரில் அக்சர் படேல் பந்தில் சூர்யகுமார்  யாதவ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து டிக் டேவிட் பேட்டிங் செய்ய வந்தார்.

    ஆஸ்திரேலிய அணி 12.6 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்துள்ளது.



  • Nov 28, 2023 21:34 IST
    ஜோஷ் இங்லிஸ் போல்ட் அவுட்

    6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்த ஜோஷ் இங்லிஸ் ரவி பிஷ்னோய் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, மார்கஸ் ஸ்டாய்னிஸ் பேட்டிங் செய்ய வந்தார்.

    ஆஸ்திரேலிய அணி 6.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 68 ரன் எடுத்துள்ளது. 



  • Nov 28, 2023 21:31 IST
    டிராவிஸ் ஹெட் அவுட் 

    அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 5.4 ஓவரில் ஆவேஷ் கான் பந்தில் ரவி பிஷ்னோய் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து கிளென் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்ய வந்தார். 

    ஆஸ்திரேலிய அணி 5.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன் எடுத்துள்ளது.



  • Nov 28, 2023 21:28 IST
    ஆரோன் ஹார்டி அவுட்

    224 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி பேட்டிங் செய்ய களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடினர். 

    ஆரோன் ஹார்டி 12 பந்தில் 16 ரன் எடுத்திருந்த நிலையில், 4.2 ஓவரில் அர்ஷ்தீப் சிங் பந்தில் இஷான் கிஷன் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ஜோஷ் இங்லிஸ் பேட்டிங் செய்ய வந்தார். 



  • Nov 28, 2023 20:49 IST
    சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்... 223 ரன் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம் அடித்ததன் மூலம், இந்திய அணி 222 ரன்கள் எடுத்தது இதன் மூலம், இந்திய அணி 223 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.



  • Nov 28, 2023 20:06 IST
    சூர்யகுமார் யாதவ் அவுட்: இந்தியா நிதான ஆட்டம்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது.
    முதலில் பேட்டிங் செய்த இந்தியா 13 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது.
    கெய்க்வாட் 41 ரன்னில் களத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது திலக் வர்மா களத்தில் உள்ளார். இவர் 12 ரன்கள் எடுத்துள்ளார்.



  • Nov 28, 2023 19:27 IST
    இஷான் கிஷன் டக் அவுட்

    ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் ஓவரை வீச வந்தார். கேன் ரிச்சர்ட்சன் வீசிய 3வது பந்தில்  மார்கஸ் ஸ்டாய்னிஸ் இடம் கேட்ச் கொடுத்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்து, சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார்.



  • Nov 28, 2023 19:13 IST
    ஆரம்பமே அதிர்ச்சி ஜெய்ஸ்வால் அவுட்

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் பேட்டிங் செய்ய களம் இறங்கினர். ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக 1.2 ஓவரில் ஜேசன் பெஹ்ரண்டாஃப் பந்தில் மேத்யூ வேட் இடம் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் அவுட் ஆனார். அடுத்து, இஷான் கிஷன் பேட்டிங் செய்ய வந்தார்.



  • Nov 28, 2023 19:10 IST
    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சு தேர்வு

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  



  • Nov 28, 2023 17:21 IST
    கவுகாத்தி ஆடுகளம் எப்படி?

     

    கவுகாத்தியில் கடைசியாக 2022-ம் ஆண்டு இங்கு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 237 ரன் குவித்தது. பேட்டிங்குக்கு அனுகூலமாக இந்த ஆடுகளத்தில் ரன் மழையை எதிர்பார்க்கலாம். 2-வது பகுதியில் பனியின் தாக்கமும் இருக்கக்கூடும். 



  • Nov 28, 2023 17:20 IST
    கடைசியாக கவுகாத்தியில்...!

    கவுகாத்தியில் இந்திய அணி மூன்று டி20 போட்டியில் விளையாடி ஒன்றில் வெற்றியும் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.



  • Nov 28, 2023 17:15 IST
    நேருக்கு நேர்!

     

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை டி20 போட்டியில் 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 17 ஆட்டங்களில் இந்தியாவும், 10 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது.



  • Nov 28, 2023 17:11 IST
    தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

     

    இன்றைய ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் தோற்றால் அந்த அணி தொடரை இழக்க வேண்டியது வரும். எனவே தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க அந்த அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் தனது ஆதிக்கத்தை நீடித்து தொடரை தன்வசப்படுத்த இந்திய அணி தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.



  • Nov 28, 2023 16:39 IST
    இந்தியா முன்னிலை!

    இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.  இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.



  • Nov 28, 2023 16:32 IST
    'இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' இணைய பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    இன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி குறித்த தகவல்களை உடனுக்கு உடன் அறிந்து கொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள். 

     

    தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil



India Vs Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment