ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபாவில் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்கியது.
முதல் நாள் ஆட்டம் - ஆஸ்திரேலியா பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்சில் ஆடியது. ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா - நாதன் மெக்ஸ்வீனி தொடக்க வீரர்களாக களமாடினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் மழை குறுக்கிட்டது. மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Australia LIVE Cricket Score, 3rd Test
13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் எடுத்த நிலையில், மழை மீண்டும் புகுந்து ஆடியது. தொடர் மழை பெய்த சூழலில் முதல் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உஸ்மான் கவாஜா 19 ரன்னுடனும், நாதன் ஸ்வீனி 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
2-வது நாள் ஆட்டம்
ஆங்கிலத்தில் படிக்க: India vs Australia LIVE Cricket Score, 3rd Test Day 2
நேற்று (டிச.15) 2-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 61 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.
2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஸ்டீவ் ஸ்மித்- டிராவிஸ் ஹெட் ஜோடி விக்கெட் இழப்பின்றி ஆடி வருகின்றனர். டிராவிஸ் ஹெட் சதம் விளாசி தொடர்ந்து ஆடி வருகிறார். ஸ்டீவ் ஸ்மித் சதத்தை நோக்கி முன்னேறுகிறார். 79.4 ஓவரில் ஆஸ்திரேலியா 297/3 .
ஹெட்டை தொடர்ந்து ஸ்மித்தும் சதம் விளாசினார். அடுத்த பந்தில் 101 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் அவுட்டனார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஆஸ்திரேலியாவுக்கு விக்கெட்கள் விழுந்தன. மிட்செல் மார்ஸ் 5 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ஹெட் 152 ரன்கள் எடுத்து 86.5 ஓவரில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் பேட் கம்மின்ஸ் சற்று நிதானமாக விளையாடி வந்த நிலையில் சிராஜ் பந்தில் ரிஷப் பந்திடம் கேட் கொடுத்து அவுட்டாகினார். இந்திய அணிக்காக தனி ஆளாக விக்கெட் வேட்டையில் ஈடுபட்டு வரும் பும்ரா இதுவரை 5 விக்கெட் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியா 101 ஓவரில் 405க்கு 7 விக்கெட் இழந்து ஆடி வருகிறது.
தொடர்ந்து 117.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆஸ்திரேலியா 445 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
3-வது நாள் ஆட்டம்
ஆங்கிலத்தில் படிக்க: India vs Australia LIVE Cricket Score, 3rd Test Day 3
இன்று (டிச.16) 3-வது நாளில் இந்தியா பேட்டிங் தொடங்கி உள்ளது. இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி கொடுத்தது. 2 பந்துகளை மட்டுமே எதிர் கொண்ட ஜெயஸ்வால் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய சுப்மல் கில், விராட் கோலியும் அடுத்தடுத்து 1, 3 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.
இப்போது ரிஷப் பந்த், கே.எல். ராகுல் களத்தில் உள்ளனர். மதிய உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா 13 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு ஆட்டம் தொடங்கிய நிலையில், தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில், 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 33 ரன்களுடனும், கேப்டன் ரோகித்த சர்மா ரன் கணக்கை தொடங்காமலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தற்போது 394 ரன்கள் பின்தங்கியுள்ளது.
4-வது நாள் ஆட்டம்
இன்று தொடங்கிய 4-வது நாள் ஆட்டத்தில் ஒருபக்கம், கே.எல்.ராகுல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் கேப்டன் ரோகித் சர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜடேஜா ராகுலுடன் இணைந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்த நிலையில், ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில், ராகுல் ஆட்டமிழந்தார்.
139 பந்துகளை சந்தித்த ராகுல் 8 பவுண்டரியுடன் 84 ரன்கள் எடுத்து லயன் பந்துவீச்சில், ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய நித்தீஷ் ரெட்டி, ஜடேஜாவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 194 ரன்களை எட்டியபோது, நித்தீஷ்குமார் ரெட்டி 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த முகமது சிராஜ் ஒரு ரன்னில் வெளியேறிய நிலையில், அரைசதம் கடந்த ஜடேஜா, 123 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 213 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 10-வது விக்கெட்டுக்கு இணைந்த ஆகாஷ் தீப் – பும்ரா ஜோடி அணியை ஃபாலோஆனில் இருந்து மீட்க போராடியது.
10-வது விக்கெட்டுக்கு இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஆகாஷ் தீப் கைதேர்ந்த பேட்ஸ்மேன்போல் சிறப்பாக விளையாடி அசத்தினார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி ஃபாலோஆனை தவிர்த்த நிலையில், தற்போது 9 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. ஆகாஷ் தீப் 31 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 27 ரன்களும், பும்ரா 10 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
5-வது நாள் ஆட்டம்
முன்னதாக 89 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 275 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பேரில், இந்திய அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் களமிறங்கினர். எனினும், தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் இப்போட்டி டிரா செய்யப்பட்டது. அதன்படி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு அணியினரும் தலா ஒரு போட்டியில் வெற்றி என்ற நிலையில் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.