India vs Australia, 3rd Test Probable Playing 11 Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இதைத்தொடர்ந்து, டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்த தொடர் வெற்றிகள் மூலம் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நாளை (மார்ச் 1ம் தேதி) நடக்கிறது. இப்போட்டியானது வழக்கம்போல் காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது. காலை 9:00 மணிக்கு டாஸ் போடப்படும்.
Snapshots from #TeamIndia's training session here in Indore ahead of the third Test match against Australia.#INDvAUS pic.twitter.com/yLmoBLxfYG
— BCCI (@BCCI) February 28, 2023
இந்தியா vs ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட்: ஆடும் லெவன் எப்படி இருக்கும்?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக, தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணி 4 இன்னிங்ஸ்களில் ஆஸ்திரேலியாவின் 40 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியது. இதனால், அவர்களது பேட்டிங் வரிசையில் ஒரு சில மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, தொடக்க வீரர் கே.எல்.ராகுல் டெல்லி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அணிக்கான புதிய துணை கேப்டனை நியமிக்கும் அதிகாரத்தை கேப்டன் ரோகித்திடம் பிசிசிஐ ஒப்படைத்துள்ளது.
கே.எல்.ராகுல் கடைசி விளையாடிய 10 இன்னிங்ஸ்களில் 125 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 35 -க்கும் குறைவாக உள்ளது. தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் இதுவரை மூன்று இன்னிங்ஸ்களில், ராகுல் 20, 17 மற்றும் 1 என்று ஆட்டமிழந்து திரும்பியுள்ளார்.
ராகுலுக்கு பதில் கில்
ஒருபுறம் ராகுல் தனது பேட்டிங்கில் தடுமாற்றம் கண்டு சரிவை சந்தித்து வரும் நிலையில், மறுபுறம் இந்த ஆண்டு இதுவரை நடந்த அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அதிக ரன்களை குவித்த வீரராக தொடக்க வீரர் ஷுப்மான் கில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் மற்றும் இரு சதங்கள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு சதம் அடித்து மிரட்டி வருகிறார். 23 வயதான அவர் கடந்த ஆண்டு டிசம்பரில் எதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தையும் அடித்திருந்தார்.
Fun times in the field ft. @imVkohli 🙂 💪#TeamIndia sharpen their catching skills ahead of the 3rd #INDvAUS Test in Indore. 👍 👍@mastercardindia pic.twitter.com/6VtHfBBbLt
— BCCI (@BCCI) February 27, 2023
இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அவர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் நாளை தொடங்கும் போட்டியில் ராகுலுக்கு பதிலாக ரோகித் ஷர்மாவுடன் தொடக்க வீரராக கில் களமிறங்குவது போல் தெரிகிறது. இந்திய வீரர்கள் மேற்கொண்ட பயிற்சியின் போது அவர் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் ஸ்லிப் கேட்ச்சிங் செஷனில் பங்கேற்று இருந்தார்.
பந்துவீச்சு வரிசையில் எந்த மாற்றமும் இல்லை
இந்திய அணியின் பந்துவீச்சு வரிசையில் ஏதேனும் மாற்றங்கள் நிகழலாம் என்று தெரிகிறது. சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் (14) மற்றும் ரவீந்திர ஜடேஜா (17) கூட்டணி தொடரில் வீழ்த்தப்பட்ட 40 விக்கெட்களில் 31 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். மூன்றாவது சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை என்றாலும், இரண்டு இன்னிங்ஸ்களில் 158 ரன்கள் எடுத்த இந்தியாவின் இரண்டாவது அதிகபட்ச ரன் எடுத்த வீரராக உள்ளார். எனவே, இந்த வின்னிங் காம்பினேஷனை இந்திய அணி நிர்வாகம் மாற்ற வாய்ப்பில்லை.
முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் வேகப்பந்துவீச்சு பார்ட்னர்ஷிப்பும் உடைக்கப்பட்ட வாய்ப்பில்லை. டெல்லியில் நடந்த 2வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் ஷமி 4 விக்கெட்டுகள் உட்பட 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மறுபுறம், சிராஜ் இரண்டு டெஸ்டிலும் இன்னிங்ஸின் ஆரம்ப கட்டங்களில் திறம்பட செயல்பட்டு இருந்தார்.
— BCCI (@BCCI) February 28, 2023
இந்தியா vs ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட்: இரு அணிகளின் உத்தேச லெவன்
இந்தியா:
ஷுப்மன் கில், ரோகித் சர்மா (கேப்டன்), சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, அக்சர் படேல் அல்லது குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
ஆஸ்திரேலியா:
டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், டோட் மர்பி, மேத்யூ குஹ்னெமன்
இந்தியா vs ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட்: இரு அணி வீரர்கள் பட்டியல்
இந்தியா:
ரோகித் சர்மா(கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரீகர் பாரத்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், உமேஷ் யாதவ்
ஆஸ்திரேலியா:
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி(வ), பாட் கம்மின்ஸ்(சி), நாதன் லியோன், ஸ்காட் போலண்ட், டாட் மர்பி, மிட்செல் ஸ்வெப்சன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், மாட் ரென்ஷா, கேமரூன் கிரீன், லான்ஸ் மோரிஸ்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.