When and Where to Watch India vs Australia 5th ODI Live Telecast: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி, நாளை டெல்லியில் நடைபெறுகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இரு அணிகளும் 2-2 என சமநிலையில் உள்ளன. முதலிரண்டு போட்டியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி, அடுத்த இரு போட்டிகளில் படு தோல்வி அடைந்தது.
அதிலும், மொஹாலியில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 358 ரன்கள் அடித்தும் தோற்றது பேரிடியாக அமைந்தது. இந்திய அணியின் பவுலிங்கை சுத்தமாக ஒன்றுமில்லாமல் ஆஸ்திரேலியா நீர்த்துப் போகச் செய்தது.
இந்தச் சூழ்நிலையில், இறுதிப் போட்டி டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நாளை (மார்ச்.13) நடைபெறுகிறது.
பிற்பகல் 01.:30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. 1 மணிக்கு டாஸ் போடப்படுகிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டிகளை நேரடியாக காணலாம்.
ஆன்லைனில் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை நேயர்கள் கண்டுகளிக்கலாம். தவிர, போட்டி குறித்த உடனடி அப்டேட்டுகளையும், புள்ளி விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:India vs australia 5th odi live streaming when and where to watch live cricket streaming
Tamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்!
1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி!
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு