India vs Australia 2024-25 Test series | Border Gavaskar Trophy 2024-25: ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர் - கவாஸ்கர் தொடர்) பங்கேற்க உள்ளது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 1991-92க்குப் பிறகு முதல் முறையாக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன.
இந்நிலையில், பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போட்டிகள் எந்தெந்த மைதானங்களில் நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அதன்படி இந்த தொடரின் முதல் ஆட்டம் பெர்த்தில் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.
2வது போட்டியான பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. 3வது போட்டி டிசம்பர் 14ம் தேதி பிரிஸ்பேன் மைதானத்திலும், 4வது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் டிசம்பர் 26ம் தேதி மெல்போர்ன் மைதானத்திலும், 5வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி சிட்னி மைதானத்திலும் தொடங்குகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Australia 2024-25 Test series: Bouncy Perth awaits Rohit Sharma and Co for first match, Adelaide hosts pink-ball Test
5-வது முறையாக வாகை சூடுமா இந்தியா?
இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடரை தொடர்ந்து 4 முறை வென்றுள்ளது. தற்போது 5வது முறையாக வெல்வதில் இந்திய அணி ஆவலுடன் களமிறங்கவுள்ளது.
2017 பார்டர்- கவாஸ்கர் - இந்தியா வெற்றி (இந்தியாவில் நடந்தது)
2019 பார்டர்- கவாஸ்கர் - இந்தியா வெற்றி (ஆஸ்திரேலியாவில் நடந்தது)
2021 பார்டர்- கவாஸ்கர் - இந்தியா வெற்றி (ஆஸ்திரேலியாவில் நடந்தது)
2023 பார்டர்- கவாஸ்கர் - இந்தியா வெற்றி (இந்தியாவில் நடந்தது).
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Australia 2024-25 Test series: Bouncy Perth awaits Rohit Sharma and Co for first match, Adelaide hosts pink-ball Test
கடந்த 1991-92ல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் என்ன நடந்தது?
1991-92 இல் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இருப்பினும், இந்தத் தொடரில் சிட்னியில் ரவி சாஸ்திரியின் இரட்டைச் சதம் மற்றும் பெர்த்தில் இளம் சச்சின் டெண்டுல்கர் 114 ரன்கள் எடுத்தது இன்றளவும் நினைவுகூரப்படுகிறது.
2024-25 ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயணம் அட்டவணை:
முதல் டெஸ்ட்: நவம்பர் 22-26, பெர்த்
2வது டெஸ்ட்: டிசம்பர் 6-10, அடிலெய்டு (பகல்-இரவு ஆட்டம்)
3வது டெஸ்ட்: டிசம்பர் 14-18, பிரிஸ்பேன்
4வது டெஸ்ட்: டிசம்பர் 26-30, மெல்போர்ன் (பாக்ஸிங் டே டெஸ்ட்)
5வது டெஸ்ட்: ஜனவரி (2025) 3-7, சிட்னி.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Australia 2024-25 Test series: Bouncy Perth awaits Rohit Sharma and Co for first match, Adelaide hosts pink-ball Test
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“