worldcup 2023 | india-vs-australia | ahmedabad: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 19 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
அகமதாபாத்தில் மழை பெய்யுமா?
இந்நிலையில், இறுதிப்போட்டி நடக்கும் அகமதாபாத் ஆடுகளம் தன்மை மற்றும் அங்கு நிலவும் வானிலை குறித்து அறிய உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் வானிலை 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் தெளிவான வானத்துடன் காணப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், மழை பெய்ய வாய்ப்பு இல்லை. மாலையில் ஆட்டம் தொடங்கும் போது ஈரப்பதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், ஒரு அதிரடி-நிரம்பிய இறுதிப் போட்டிக்கு சாதகமான வானிலை நிலவுகிறது. மேலும் 100 ஓவர்கள் கொண்ட போட்டியை ரசிகர்கள் முழுமையாகக் காண முடியும்.
அகமதாபாத் ஆடுகளம் ஆடுகளம் எப்படி?
அகமதாபாத் ஆடுகளத்தைப் பொறுத்த வரையில், சீமர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆகிய இருவருக்கும் விக்கெட்டுகள் கிடைக்கும். பேட்ஸ்மேன்கள் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அதிக ரன்களை குவித்து விடலாம். இங்கு கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன.
கடந்த ஐந்து ஆட்டங்களில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 253 ஆகும். அதே நேரத்தில், சேசிங் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு 325 ஆகும். இருப்பினும், இறுதிப் போட்டியில் அழுத்தத்தின் கீழ் சேசிங் செய்வது கடினமான பணியாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. மேலும், இதுவரை விளையாடிய 12 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் நான்கில் மட்டுமே சேசிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“