India Vs Australia Final | U19 ICC World Cup 2024: தென் ஆப்பிரிக்க மண்ணில் நடைப்பெற்று வரும் 15-வது ஜூனியர் உலகக் கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1:30 மணிக்கு பெனோனி நகரில் உள்ள வில்லோமூர் பார்க்கில் அரங்கேறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா ஜூனியர் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இரு அணிகளின் விளையாடும் வீரர்கள் விவரம்
இந்திய அணி: ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன் (கேப்டன்), பிரியான்ஷு மோலியா, சச்சின் தாஸ், ஆரவெல்லி அவனிஷ் (விக்கெட் கீப்பர்), முருகன் அபிஷேக், ராஜ் லிம்பானி, நமன் திவாரி, சௌமி பாண்டே
ஆஸ்திரேலியா அணி: ஹாரி டிக்சன், சாம் கான்ஸ்டாஸ், ஹக் வெய்ப்ஜென் (கேப்டன்), ஹர்ஜாஸ் சிங், ரியான் ஹிக்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆலிவர் பீக், சார்லி ஆண்டர்சன், ராஃப் மேக்மில்லன், மஹ்லி பெட்ரார்ட்மேன், மஹ்லி வில்ஸ்ட்ரகர்மேன்
ஆஸ்திரேலியா பேட்டிங்
ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்களாக ஹாரி மற்றும் சாம் களமிறங்கினர். சாம் 8 பந்துகளைச் சந்தித்து டக் அவுட் ஆனார். அடுத்ததாக ஹாரியுடன் வெய்ப்ஜன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது. வெய்ப்ஜன் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்ஜஸ் களமிறங்கிய சிறிது நேரத்திலே ஹாரி 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரியான் 20 ரன்களில் அவுட் ஆனார். இதற்கிடையில், சிறப்பாக ஆடி வந்த ஹர்ஜஸ் அரை சதம் அடித்தார்.
பின்னர் ஓலிவர் களமிறங்கிய சிறிது நேரத்தில் ஹர்ஜஸ் 55 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த மேக்மில்லன் 2 ரன்களிலும், ஆண்டர்சன் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து டாம் களமிறங்கி 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. ஒலிவர் 46 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ராஜ் 3 விக்கெட்களையும், திவாரி 2 விக்கெட்களையும், பாண்டே மற்றும் முஷீர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஆதர்ஷ் மற்றும் குல்கர்னி களமிறங்கினர். ஆதர்ஷ் 3 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய முஷீர் 22 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய உதய் 8 ரன்களிலும், சச்சின் 9 ரன்களிலும், பிரியான்ஷூ 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அவனீஷ் டக் அவுட் ஆனார்.
அடுத்து முருகன் அபிஷேக் களமிறங்கிய சிறிது நேரத்தில், மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ஆதர்ஷ் 47 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராஜ் டக் அவுட் ஆனார். அடுத்து நமன் திவாரி இறங்கி கம்பெனி கொடுக்க, முருகன் சற்று அதிரடியாக ஆடினார். இருப்பினும் முருகன் 42 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த பாண்டே 2 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பியர்மேன் மற்றும் மேக்மில்லன் தலா 3 விக்கெட்களையும், விட்லர் 2 விக்கெட்களையும், ஆண்டர்சன் மற்றும் டாம் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனால் 79 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. மேலும் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.
உதய் சஹாரன் தலைமையிலான இந்திய ஜூனியர் அணி முதல் அரைஇறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கேப்டன் உதய் சஹாரன் (81 ரன்கள்) தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதேபோல், மிடில் -ஆடரில் களமிறங்கிய சச்சின் தாஸ் 96 ரன்கள் குவித்து தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். எனவே, அதே உத்வேகத்துடன் இந்திய ஜூனியர் அணி இன்றைப் போட்டியில் களமிறங்கும்.
இந்திய ஜூனியர் அணியில் முஷீர் கான், கேப்டன் உதய் சஹாரன், சச்சின் தாஸ் மற்றும் சவுமி பாண்டே ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதில் கேப்டன் உதய் சஹாரன் (389 ரன்கள்), முஷீர் கான் (338 ரன்கள்), சச்சின் தாஸ் (294 ரன்கள்) ஆகியோர் இந்த தொடரில் அதிக ரன் குவித்தவர்களாக வலம் வருகிறார்கள். இதேபோல், சுழலில் மிரட்டி வரும் சவுமி பாண்டே 17 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் முன்னணியில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, சாம் கான்ஸ்டாஸ், ஹாரி டிக்சன், வெய்ப்ஜென், காலம் விட்லர் மற்றும் டாம் ஸ்ட்ரேக்கர் ஆகியோர் முக்கிய வீரர்களாக உள்ளனர். இதில் டிக்சன் (267 ரன்கள்), வெய்ப்ஜென் (256 ரன்கள்) மற்றும் கான்ஸ்டாஸ் (191 ரன்கள்) ஆகியோர் அதிக ரன்களை குவித்த வீரர்களாக உள்ளனர். பந்துவீச்சில் கலக்கி வரும் விடிலர் மற்றும் ஸ்ட்ரேக்கர் ஆகியோர் தலா 12 விக்கெட்டுகளுடன் முன்னணியில் இருக்கின்றனர்.
கடந்த ஆண்டு இறுதியில் இந்திய சீனியர் அணி சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கவும், நடப்பு சம்பியன்களாகவும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தவும் இந்திய ஜூனியர் அணியினர் வரிந்து காட்டுவார்கள். அதேவேளையில், அதனை முயறித்து புதிய சாதனை படைக்க ஆஸ்திரேலியா நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இந்த இறுதிப்போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பிட்ச் ரிப்போர்ட்
இறுதிப் போட்டி நடக்கும் வில்லோமூர் பார்க்கில் உள்ள ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் உதவும். இங்கு புதிய பந்தின் மூலம் வேகப்பந்து வீச்சாளர்கள் நம்பமுடியாத சாதனையையும் படைத்துள்ளனர். எனவே, ஆட்டம் குறைந்த ஸ்கோராக இருக்கும்.
இந்த ஆடுகளத்தில் விளையாடப்பட்ட 27 ஒருநாள் போட்டிகளில், முதலில் பந்துவீசி அணியே 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த அணி 8 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
நேருக்கு நேர்
ஐ.சி.சி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஜூனியர் அணிகள் இதற்கு முன் மூன்று முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. 2012 மற்றும் 2018 ஆகிய இரு இறுதிப் போட்டிகளிலும் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது.
வானிலை அறிக்கை
இறுதிப் போட்டி நடக்கும் தென் ஆப்பிரிக்காவின் பெனோனி நகரில் ஞாயிற்றுக்கிழமை, (பிப்ரவரி 11) 40 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது. தூறல் காரணமாக போட்டியில் சில இடையூறுகளை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸுடன் 69 சதவீத ஈரப்பதத்துடன் இருக்கும்.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:
இந்திய ஜூனியர் அணி: அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா, முஷீர் கான், உதய் சஹாரன் (கேப்டன்), ஆரவெல்லி அவனிஷ் ராவ், சௌமி குமார் பாண்டே, முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன், தனுஷ் கவுடா, ஆராத்யா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.
ஆஸ்திரேலிய ஜூனியர் அணி: ஹக் வெய்ப்ஜென் (கேப்டன்), லாச்லான் ஐட்கன், சார்லி ஆண்டர்சன், ஹர்கிரத் பஜ்வா, மஹ்லி பியர்ட்மேன், டாம் காம்ப்பெல், ஹாரி டிக்சன், ரியான் ஹிக்ஸ், சாம் கான்ஸ்டாஸ், ரஃபேல் மேக்மில்லன், எய்டன் ஓ'கானர், ஹர்ஜாஸ் சிங், டாம் ஸ்ட்ரேக்கர், கால்லம் விட். ஒல்லி பீக்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.