Advertisment

ஜூனியர் உலகக் கோப்பை: இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டியை ஆன்லைனில் லைவ் ஆக பார்ப்பது எப்படி?

ஜூனியர் உலகக் கோப்பைகிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 1:30 மணிக்கு ன் ஆப்பிரிக்காவில் அரங்கேறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா ஜூனியர் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

author-image
WebDesk
New Update
India Vs Australia Final U19 ICC World Cup 2024 live streaming and broadcasting details in tamil

இந்தியா vs ஆஸ்திரேலியா ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி: ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங் விபரம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

India Vs Australia Final | U19 ICC World Cup 2024: தென் ஆப்பிரிக்க மண்ணில் நடைப்பெற்று வரும் 15-வது ஜூனியர் உலகக் கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1:30 மணிக்கு பெனோனி நகரில் உள்ள வில்லோமூர் பார்க்கில் அரங்கேறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா ஜூனியர் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

Advertisment

உதய் சஹாரன் தலைமையிலான இந்திய ஜூனியர் அணி முதல் அரைஇறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. மறுபுறம், ஹக் வெய்ப்ஜென் தலைமையிலான ஆஸ்திரேலிய ஜூனியர் அணி 2வது அரைஇறுதிப் போட்டியில் பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs AUS Live Streaming, U19 World Cup 2024: When and where to watch India vs Australia final?

இந்தியா vs ஆஸ்திரேலியா ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறுவது எப்போது?- தேதி

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை - பிப்ரவரி 11) நடைபெறுகிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி எப்போது தொடங்கும்?- நேரம்

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி எங்கு நடைபெறும்?- இடம்

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப் போட்டி தென் ஆப்பிரிக்காவின் பெனோனியில் உள்ள வில்லோமூர் பூங்காவில் நடைபெறுகிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஆன்லைனில் நேரலையில் லைவ் ஆகப் பார்ப்பது எப்படி?

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப் போட்டியை ஆன்லைனில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம்.

இந்தியா vs ஆஸ்திரேலியா ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி எந்த டி.வி-யில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்? 

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப் போட்டி நேரலை ஒளிபரப்பை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs Australia U19 ICC World Cup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment