/tamil-ie/media/media_files/uploads/2020/12/india-australia.jpg)
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி 3 டி20 போட்டி மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியாவும் கைப்பற்றியது.
தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை (டிசம்பர்-17) அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த டெஸ்ட் தொடருக்கு தாயராகும் வகையில் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய ஆஸ்திரேலிய வீரர்கள் 3 நாட்கள் கொண்ட 2 பயிற்சி ஆட்டத்தில் மோதினர்.
இந்த இரண்டு போட்டிகளும் டிராவில் முடிவடைந்தது. ஆனாலும் இரு அணிகளை சேர்ந்த வீர்ர்களும் தங்களது சிறப்பாக பங்களிப்பை கொடுத்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பை உறுதி செய்துள்ளனர். குறிப்பாக 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்தலான பணியை செய்தது. இதில் முதல் இன்னிங்சில் 194 ரன்களில் சுருண்ட இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை 108 ரன்களில் சுருட்டி தனது அசத்தல் பந்துவீச்சை வெளிப்படுத்தியது.
மேலும் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த செய்த இந்திய அணியில் 5-வது விக்கெட்டுக்கு இணைந்த ஹனுமா விஹாரி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஜோடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தது. இதில் விஹாரி ஒருபுறம் நிதானமாக விளையாட மறுமுனையில் டி20 தொடரை போல் விளையாடிய ரிஷப் பண்ட் 73 பந்துகளில் சதமடித்தார். அதிலும் 2-வது நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 22 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதனால் நாளை தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருவருக்கும் அணியில் இடம கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா தரப்பில் நாளை நடைபெறும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வீரர் யார் என்பது குறித்து பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்க்கு இடம் கிடைக்கவில்லை. பண்ட்க்கு பதிலாக விக்கெட் கீப்பர் விருத்திமான சஹா ஆடும் லெவன் அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும் பயிற்சி ஆட்டத்தில் திறம்பட செயல்பட்ட சுப்மான் கில் மற்றும் கெஎல் ராகுல் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
ஆஸ்திரேலிய அணியில் வீரர்களின் காயம் அந்த அணிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தொடக்க வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில், பயிற்சி ஆட்டத்தில் காயமடைந்த இளம் வீரர் கேமரூன் கிரீன் நாளை போட்டிக்கு தகுதி பெறுவாரா என்பது குறித்து பெரும் கேள்வி எழுந்துள்ளது. அவர் களமிறங்குவரா? மாட்டாரா? என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜெஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பயிற்சியில் காயமடைந்ததால், பாதியில் வெளியேறினார். ஆனால் சாதாரன காயம் தான் ஸ்மித் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். நாளைய போட்டியில் அவர் பங்கேற்பார் என ஆஸ்திரேலிய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையபோட்டியில் அவர் விளையாடாத பட்சத்தில், இளம் வீரர் ஒருவர் அவரது இடத்தில் விளையாடுவார் என தெரிகிறது.
ஏற்கனவே கடந்த 2018-19-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. அதேபோல் இந்த தொடரையும் கைப்பற்ற இந்திய அணி தீவிரமாக முயற்ச்சிக்கும். ஆனால் அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணியும் வெற்றிக்கான போராடும் என்பதில் சந்தேகமில்லை.
அடிலெய்டில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அடிலெய்டு ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:
விராட்கோலி (கே) மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, ரஹானே, விருத்திமான சஹா, ஹனுமா விஹாரி, அஸ்வின் , ஊமேஷ் யாதவ், முகமது ஷமி, பும்ரா
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.