India vs Australia (IND vs AUS) 1st Test match 2023 Live Streaming | இந்தியா vs ஆஸ்திரேலியா {IND vs AUS} முதலாவதுபோட்டி 2023 நேரடிஒளிபரப்பு: இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை (பிப்ரவரி 9ம் தேதி) காலை 9:30 மணிக்கு நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
இதையும் படியுங்கள்: IND vs AUS 1st Test Live Score: ஆஸி,.-க்கு அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; தொடக்க ஜோடியை காலி செய்த சிராஜ், ஷமி
பிப்ரவரி 2010க்குப் பிறகு விதர்பா ஸ்டேடியத்தில் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோற்றதில்லை. இந்தியா தனது கடைசி டெஸ்ட் போட்டியில் 2017 நவம்பரில் இலங்கைக்கு எதிராக விளையாடி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Lights 💡
— BCCI (@BCCI) February 7, 2023
Camera 📷
Action ⏳
🎥 Snippets from #TeamIndia‘s headshots session ahead of the #INDvAUS Test series! 👌 👌 pic.twitter.com/sQ6QIxSLjm
இந்தியா vs ஆஸ்திரேலியா: லைவ் ஸ்ட்ரீமிங் பார்ப்பது எப்படி?
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வாங்கியுள்ளது. அதன்படி, நாளை முதல் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி முதல் முழு தொடரையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் ஒளிபரப்பு செய்கிறது. ஓடிடி தளத்தில் இந்தியாவில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது.
இருப்பினும், இந்த மூன்று வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்தி இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவில் இலவசமாகப் பார்க்கலாம்:
இதையும் படியுங்கள்: IND vs AUS 1st Test Live Score: ஆஸி,.-க்கு அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; தொடக்க ஜோடியை காலி செய்த சிராஜ், ஷமி
ஜியோ டி.வி (JIO TV):
அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களும் இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டியை ஜியோ டிவியில் இலவசமாகப் பார்க்கலாம். உங்கள் மொபைலில் உள்ள ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து ஜியோ டி.வி ஆப்பை பதிவிறக்கவும்.
உங்கள் ஜியோ கணக்குச் சான்றுகளுடன் ஜியோ டி.வி ஆப்பில் உள்நுழையவும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களைக் கண்டறிய, பயன்பாட்டின் தேடல் பட்டியைப் பயன்படுத்தவும். இப்போது இலவசமாக விளையாட்டை பார்க்க சேனலை கிளிக் செய்யவும்.
இதையும் படியுங்கள்: IND vs AUS 1st Test Live Score: ஆஸி,.-க்கு அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; தொடக்க ஜோடியை காலி செய்த சிராஜ், ஷமி
ஏர்டெல் டிவி: ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு, ஏர்டெல் இந்தியா-ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட் போட்டியின் இலவச லைவ்ஸ்ட்ரீமை அணுக, ஏர்டெல் சந்தாதாரர்கள் ஏர்டெல் டிவி செயலியை ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து, லைவ்ஸ்ட்ரீமை எளிதாக பார்க்க முடியும்.
ஹாட்ஸ்டாரில் இலவசமாகப் பார்க்கலாம்: சந்தா திட்டங்களின் மூலம், ஜியோ, ஏர்டெல் மற்றும் வி போன்ற தொலைத்தொடர்பு வழங்குநர்களும் தங்கள் பயனர்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி செயலிக்கான இலவச அணுகலை வழங்குகிறார்கள்.
Permutation-combination for the #INDvAUS Test series opener❓#TeamIndia | @ImRo45 pic.twitter.com/njzAzGLNEp
— BCCI (@BCCI) February 8, 2023
பார்டர் – கவாஸ்கர் கோப்பை: இரு அணி உத்தேச லெவன் பட்டியல்:
இந்தியா
ரோகித் சர்மா, சுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கேஎல் ராகுல், கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குலதீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா:
உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), டிராவிஸ் ஹெட், ஆஷ்டன் அகர், நாதன் லியோன், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட், டாட் மர்பி.
இதையும் படியுங்கள்: IND vs AUS 1st Test Live Score: ஆஸி,.-க்கு அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; தொடக்க ஜோடியை காலி செய்த சிராஜ், ஷமி
இரு அணி வீரர்கள் பட்டியல்:
இந்தியா
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ். பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.
ஆஸ்திரேலியா
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியான், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்டார்மிக், ஸ்டீவ் ஸ்டார்மிக் , மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்
இந்தியா vs ஆஸ்திரேலியா: முதல் டெஸ்ட் போட்டி எங்கு நடைபெறும்?
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா vs ஆஸ்திரேலியா எப்போது தொடங்கும்?
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா vs ஆஸ்திரேலியா: போட்டியை எந்த பிளாட்ஃபார்ம் லைவ் ஸ்ட்ரீம் செய்யும்?
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியை இந்தியாவில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil