Advertisment

Ind vs Aus: அஸ்வின், ஜடேஜா சுழலில் சுருண்ட ஆஸ்திரேலியா; தொடரை வென்று இந்தியா அசத்தல்

India vs Australia 2nd ODI Score: சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அதிரடி சதம்; 399 ரன்கள் குவித்த இந்தியா; அஸ்வின், ஜடேஜா சுழலில் சுருண்ட ஆஸ்திரேலியா; தொடரை வென்று இந்தியா அசத்தல்

author-image
WebDesk
New Update
ss

India vs Australia 2nd ODI match

India vs Australia 2nd ODI Score: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று (செப்டம்பர் 24) நடைபெறுகிறது. பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

Advertisment

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்று வருகிறது. பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், முதல் 2 ஆட்டங்களில் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் கே.எல். ராகுல் தலைமையில் இந்திய அணி விளையாடுகிறது.  2-வது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதே நேரத்தில், ஆஸ்திரேலியா அணி வீரர்கள் முதல் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2வது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். இந்தூரில் பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.

இந்திய அணி வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா அல்லது முகமது சிராஜ், முகமது ஷமி. 

ஆஸ்திரேலிய அணி வீரர்கள்: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ் அல்லது ஆரோன் ஹார்டி, மேத்யூ ஷார்ட், கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்போட், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட். 

இந்தியா பேட்டிங்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே இந்தூரில் நடைபெறும் 2-வது ஒரு நாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடாக்க ஆட்டக்காரர்கள், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில் பேட்டிங் செய்ய களம் இறங்கினர்.

ருதுராஜ் - சுப்மன் கில் ஜோடி நிதானமாக ஆடியது. ஆனால், 3.4வது ஓவரில் 12 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்த  ருதுராஜ், ஹசில்வுட் பந்தில் அலெக்ஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங் செய்ய வந்தார். ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடி வருகிறார். மறுமுனையில் சுப்மன் கில் நிதானமாக விளையாடினார்.

இந்திய அணி 9.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 27 பந்துகளில் 32 ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 20 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை விட்டது ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழை நின்றபின் ஆட்டம் தொடங்கியதையடுத்து, ஷ்ரேயஸ் ஐயர் - சுப்மன் கில் இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். ஷ்ரேயஸ் ஐயர் - சுப்மன் கில் இருவரும் அரைசதம் அடித்தனர். இதையடுத்து, தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் சதம் அடித்து அசத்தினார்.

சதம் அடித்த சிறிது நேரத்திலேயே ஷ்ரேயஸ் ஐயர் சீன் அப்பார் பந்தில் மேட் ஷார்ட் இடம் கேட் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து, கே.எல். ராகுல் பேட்டிங் செய்ய வந்தார். மறுபுறம் சுப்மன் கில் அடுத்து சதமடித்து அசத்தினார்.

சுப்மன் கில் சதமடித்ததை அடுத்து, அவரும் ஷ்ரேயஸ் ஐயர் போல, 105 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து, இஷான் கிஷண் பேட்டிங் செய்ய வந்தார்.

இஷான் கிஷண் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேமிரான் கிரீன் பந்தில் அலெக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

அடுத்து, சூரியகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார்.  அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுல் 38 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த நிலையில், கேமெரான் கிரீன் பந்தில் போல்ட் அவுட் ஆனார். இதையடுத்து, ரவிந்திர ஜடேஜா பேட்டிங் செய்ய வந்தார்.

மறுபுறம் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ், 24 பந்துகளில் அரைசதம் அடித்தார். 

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் ரன்கள் எடுத்தனர். சூரியகுமார் யாதவ் 37 பந்துகளில் 6 சிக்ஸ், 6 ஃபோர்கள் உடன்  72 ரன்களும், ஜடேஜா 13 ரன்களும் எடுத்து இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்தனர்.

இதன் மூலம்,  ஆஸ்திரேலியா அணி 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்களாக ஷார்ட் மற்றும் வார்னர் களமிறங்கினர். ஷார்ட் 9 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்மித் டக் அவுட் ஆனார். இருவரது விக்கெட்களையும் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார். அடுத்ததாக வார்னருடம் லபுசனே ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியின் எண்ணிக்கையை 50 ரன்களுக்கு மேல் உயர்த்திய நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 33 ஒவர்களாக குறைக்கப்பட்டு 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மழைக்கு பின்னர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே அஸ்வின் பந்தில் லபுசனே போல்டானார். லபுசனே 27 ரன்கள் எடுத்தார். அடுத்து ஜோஷ் களமிறங்கிய சிறிது நேரத்தில் வார்னர் அரை சதம் கடந்தார். இருப்பினும் 53 ரன்களில் அஸ்வின் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். அதே ஓவரின் 5 ஆவது பந்தில் ஜோஷ் 6 ரன்களில் எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் கேரி 14 ரன்களில் ஜடேஜா பந்தில் போல்டானார்.

மறுமுனையில் ஆடிய கிரீன் 19 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய சீன் அப்பாட் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இருப்பினும் மறுமுனையில் களமிறங்கிய ஜாம்பாவை 5 ரன்களில் ஜடேஜா போல்டாக்கினார். அடுத்து வந்த ஹேசல்வுட் அதிரடி காட்டினார். அப்பாட் மற்றும் ஹேசல்வுட் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். சிறப்பாக ஆடிய சீன் அப்பாட் அரை சதம் கடந்தார். இருப்பினும் ஹேசல்வுட் 23 ரன்களில் ஷமி பந்தில் போல்டானார். அடுத்ததாக ஜான்சன் களமிறங்கிய நிலையில், அப்பாட் 54 ரன்களில் அவுட் ஆனார். 36 பந்துகளைச் சந்தித்த அப்பாட் 5 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளை விளாசினார்.

ஆஸ்திரேலியா அணி 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்களையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்களையும், ஷமி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Vs Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment