/indian-express-tamil/media/media_files/2fDbY7vzfIMET6ytflLx.jpg)
இந்தியா vs ஆஸ்திரேலியா 4வது டி20 - இன்று மோதல்
India-vs-australia: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
கவுகாத்தியில் நடந்த 3-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி கண்டது. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற யிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Australia Live Score, 4th T20
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 01, 2023 22:50 IST
20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி... டி20 தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா!
20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியி மேத்யூ வேட் 20 ரன்களுடனும் கிறிஸ் கிரீன் 2 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம், டி20 போட்டிகளில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியது.
-
Dec 01, 2023 22:43 IST
பென் துவார்ஷுய்ஸ் போல்ட் அவுட்
பென் துவார்ஷுய்ஸ் 1 ரன் மட்டுமே எடுத்து, ஆவேஷ் கான் பந்தில் போல்ட் அவுட் ஆனார். அடுத்து கிறிஸ் கிரீன் பேட்டிங் செய்ய வந்தார்.
-
Dec 01, 2023 22:41 IST
மேட் ஷார்ட் அவுட்
மேட் ஷார்ட் 19 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தீபக் சாஹர் பந்தில் ஜெய்ஸ்வால் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து பென் துவார்ஷுய்ஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
-
Dec 01, 2023 22:23 IST
டிம் டேவிட் அவுட்
ஆஸ்திரேலியா அணி 11.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்திருந்தபோது, 20 பந்துகளில் 19 ரன் அடித்திருந்த டிம் டேவிட் தீபக் சாஹர் பந்தில் ஜெய்ஸ்வால் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, மேத்யூ வேட் பேட்டிங் செய்ய வந்தார்.
-
Dec 01, 2023 21:50 IST
பென் மெக்டெர்மாட் போல்ட் அவுட்
பென் மெக்டெர்மாட் 22 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தபோது, அக்ஸர் படேல் போல்ட் அவுட் ஆனார். அடுத்து மேட் ஷார்ட் பேட்டிங் செய்ய வந்தார்.
-
Dec 01, 2023 21:47 IST
ஆரோன் ஹார்டி போல்ட் அவுட்
ஆஸ்திரேலியா அணி 6.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன் எடுத்திருந்த நிலையில், ஆரோன் ஹார்டி 9 பந்துகளில் 8 ரன் அடித்திருந்தபோது, அக்ஸர் படேல் பந்தில் போல்ட் அவுட் ஆனார். அடுத்து,
செய்ய வந்தார். -
Dec 01, 2023 21:42 IST
அதிரடியாக விளையாடியா டிராவிஸ் ஹெட் அவுட்
ஆஸ்திரேலியா அணி 4.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 44 ரன் எடுத்திருந்த நிலையில், அதுவரை அதிரடியாக அடித்து ஆடி வந்த டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் 31 அடித்திருந்தபோது, அக்ஸர் படேல் பந்தில் முகேஷ் குமாரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ஆரோன் ஹார்டி பேட்டிங் செய்ய வந்தார்.
-
Dec 01, 2023 21:39 IST
ஜோஷ் பிலிப்பே போல்ட் அவுட்
ஆஸ்திரேலியா அணி 3.1 ஓவரில் 40 ரன் எடுத்திருந்த நிலையில், 7 பந்துகளில் 8 ரன் அடித்திருந்த ஜோஷ் பிலிப்பே, ரவி பிஷ்னோய் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து பென் மெக்டெர்மாட் பேட்டிங் செய்ய வந்தார்.
-
Dec 01, 2023 21:39 IST
ஜோஷ் பிலிப்பே போல்ட் அவுட்
ஆஸ்திரேலியா அணி 3.1 ஓவரில் 40 ரன் எடுத்திருந்த நிலையில், 7 பந்துகளில் 8 ரன் அடித்திருந்த ஜோஷ் பிலிப்பே, ரவி பிஷ்னோய் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார்.
-
Dec 01, 2023 21:37 IST
175 ரன் ரன் இலக்கு; டிராவிஸ் ஹெட் - ஜோஷ் பிலிப்பே ஓபனிங் பேட்டிங்
175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் ஜோஷ் பிலிப்பே பேட்டிங் செய்ய களம் இறங்கினர்.
-
Dec 01, 2023 20:58 IST
இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவிப்பு
இந்திய அணி 20 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேல்யா அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
-
Dec 01, 2023 20:55 IST
ரவி பிஷ்னோய் ரன் அவுட்
ரவி பிஷ்னோய் 3 பந்துகளில் 4 ரன் எடுத்திருந்தபோது, 20வது ஓவர் கடைசி பந்தில் அவரை ஜோஷ் பிலிப் ரன் அவுட் செய்தார்.
-
Dec 01, 2023 20:47 IST
தீபக் சாஹர் டக் அவுட்
தீபக் சாஹர் 2வது பந்தில், பென் துவார்ஷுய்ஸ் ஓவரில் கிறிஸ் கிரீன் இடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து ரவி பிஷ்னோய் பேட்டிங் செய்ய வந்தார். அடுத்து ஆவேஷ் கான் பேட்டிங் செய்ய வந்தார்.
-
Dec 01, 2023 20:37 IST
அரைசதத்தை தவறவிட்ட ரின்கு சிங்
இந்திய அணி 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. அதிரடி அடித்து கலக்கிய ரின்கு சிங் 29 பந்துகளில் 46 ரன் அடித்திருந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஜேசன் பெஹ்ரண்டாஃப் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி அரைசதத்தை தவறவிட்டார். அடுத்து ரவி பிஷ்னோய் பேட்டிங் செய்ய வந்தார்.
-
Dec 01, 2023 20:35 IST
அக்சர் படேல் டக் அவுட்
பென் துவார்ஷுய்ஸ் வீசிய பந்தில், தன்வீர் சங்காவிடம் கேட்ச் கொடுத்து அக்சர் படேல் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து தீபக் சாஹர் பேட்டிங் செய்ய வந்தார்.
-
Dec 01, 2023 20:32 IST
அதிரடியாக ஆடிய ஜிதேஷ் ஷர்மா அவுட்
இந்திய அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு ஜிதேஷ் ஷர்மா 167 ரன் எடுத்திருந்த நிலையில், அதிரடியாக விளையாடி கலக்கிய ஜிதேஷ் ஷர்மா 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தபோது, பென் துவார்ஷுய்ஸ் பந்தில் டிரவிஸ் ஹெட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, அக்ஸர் படேல் பேட்டிங் செய்ய வந்தார்.
-
Dec 01, 2023 20:29 IST
அதிரடியாக கலக்கிய ரின்கு சிங் - ஜிதேஷ் ஷர்மா ஜோடி
ரின்கு சிங் உடன் ஜோடி சேர்ந்த ஜிதேஷ் ஷர்மா அதிரடியாக அடித்து விளையாடினார். ரின்கு சிங் பந்துகளை பந்துகளை சிக்ஸ், ஃபோர் என்று விளாசினார். அதே போல, ஜிதேஷ் ஷர்மா 3 சிக்ஸர்களைப் பறக்க விட்டார்.
-
Dec 01, 2023 20:26 IST
அதிரடியாக அடித்து ஆடிய ருதுராஜ் அவுட்
இந்திய அணி 13.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்திருந்தபோது, மறுமுனையில் அதிரடியாக அடித்து ஆடிய மற்றொரு ஓபனிங் பேட்டர் ருதுராஜ் 28 பந்தில் 32 ரன் எடுத்திருந்த நிலையில், தன்வீ சங்கா பந்தில் பென் துவார்ஷுய்ஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஜிதேஷ் ஷர்மா பேட்டிங் செய்ய வந்தார்.
-
Dec 01, 2023 20:21 IST
வந்த வேகத்திலேயே வெளியேறிய சூர்யகுமார் யாதவ்
இந்திய அணி 8.1 ஓவரில் 63 ரன் எடுத்திருந்தபோது, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 1 ரன் மட்டுமே எடுத்து, பென் துவார்ஷுய்ஸ் பந்தில் மேத்யூ வேட் இடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே வெளியேறினார். அடுத்து, ரின்கு சிங் பேட்டிங் செய்ய வந்தார்.
-
Dec 01, 2023 20:18 IST
ஏமாற்றம் அளித்த ஷ்ரேயாஸ் ஐயர்
இந்திய அணி 7.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்திருந்தபோது, 7 பந்துகளில் 8 ரன் அடித்திருந்த ஷ்ரேயாஸ் ஐயர், தன்வீர் சங்கா பந்தில் கிறிஸ் கிரீன் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். அடுத்து சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார்.
-
Dec 01, 2023 20:15 IST
ஜெய்ஸ்வால் அவுட்
ஜெய்ஸ்வால் - ருதுராஜ் ஓபனிங் ஜோடி பங்காளி ஆட்டம் 50 ரன் சேர்த்த நிலையில், ஜெய்ஸ்வால் 28 பந்துகளில் 37 ரன் எடுத்திருந்தபோது, 5.6வது ஓவரில் ஆரோன் ஹார்டி வீசிய பந்தில், மெக் டெர்மாட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய வந்தார்.
-
Dec 01, 2023 19:17 IST
இந்தியா முதலில் பேட்டிங்; ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம்
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனால், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால், ருதுராஜ் களம் இறங்கினர். 3 ஓவர்களையும் முழுமையாக சந்தித்த ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 19 ரன்கள் எடுத்தார். தற்போது இந்திய அணி 3.4 ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 29 ரன் எடுத்துள்ளது.
-
Dec 01, 2023 18:51 IST
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
-
Dec 01, 2023 18:26 IST
தொடரை வெல்லுமா இந்தியா?
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் பணிச்சுமை காரணமாக விலகி இருப்பது இந்திய அணிக்கு அனுகூலமான விஷயமாகும். தொடரை வெல்ல இந்திய அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் தொடரை இழக்காமல் இருக்க ஆஸ்திரேலிய அணி தீவிரமாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்பு குறைவு இருக்காது.
-
Dec 01, 2023 18:25 IST
ராய்ப்பூர் ஆடுகளம்
ராய்ப்பூர் மைதானத்தில் 20 ஓவர் சர்வதேச போட்டி அரங்கேறுவது இதுவே முதல்முறையாகும். இங்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து இருந்தது. -
Dec 01, 2023 18:23 IST
இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.