India-vs-australia | indian-cricket-team: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வரவுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய நேற்று அறிவிக்கபட்ட நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு முதல் இரண்டு ஆட்டங்களில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால், முதல் இரண்டு ஆட்டங்களுக்கான இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் அணியில் சேர்க்கப்படாமல் இருந்த ஸ்ரேயஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் முதல் 2 ஆட்டங்களில் அணியில் இடம்பெறாத ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரைப் பொறுத்தவரை, இந்தியாவில் நடக்க உள்ள உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் கடைசி ஒருநாள் தொடர் ஆகும். இலங்கை மண்ணில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் வெற்றி வாகை சூடிய இந்திய கிரிக்கெட் அணி அதே வெற்றிக் களிப்புடன் இந்த தொடரில் களமாடும். ஏற்கனவே ஆசிய கோப்பை போட்டியில் உலகக் கோப்பைக்கான ஆடும் லெவனை முடிவு செய்துள்ள இந்தியா, இத்தொடரில் அந்த வரிசையை மீண்டும் முயற்சிக்கும்.
மறுபுறம், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 - 2 என தோல்வி அடைந்தது ஆஸ்திரேலியா. உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அந்த அணிக்கும் இந்த தொடர் தான் கடைசி ஒருநாள் தொடராக இருக்கும். காயம் அடைந்த பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய மூவரும் இந்திய தொடருக்குத் திரும்புகிறார்கள். கிளென் மேக்ஸ்வெல்லும் விளையாட தயாராக உள்ளார்.
பேட் கம்மின்ஸ் இல்லாத நேரத்தில், தென் ஆப்பிரிக்கா தொடரில் ஆஸ்திரேலியாவை மிட்செல் மார்ஷ் வழிநடத்தினார். மார்ஷ் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும், ஒருநாள் போட்டிகளில் அவரது கேப்டன்சி தேவைப்பட்டது. கம்மின்ஸ் அணிக்கு திரும்புவது ஆஸி வேக தாக்குதலுக்கு வலு சேர்க்கும். மேக்ஸ்வெல் மற்றும் ஸ்மித் திரும்புவது பேட்டிங்கை பலப்படுத்தும்.
இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகளின் முழு அட்டவணை மற்றும் ஆன்லைனில் 'லைவ்' பார்ப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் எப்போது நடைபெறும்?
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் செப்டம்பர் 22-ம் தேதி முதல் தொடங்குகிறது
இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் எங்கு நடைபெறும்?
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் மைதானங்கள் யாவை?
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகள் மொஹாலி, இந்தூர் மற்றும் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது
இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை ஆன்லைனில் 'லைவ்' பார்ப்பது எப்படி
இந்தியாவில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 (Sports18) சேனலில் நேரலையில் பார்க்கலாம். இணையத்தில் ஸ்ட்ரீமிங் செய்து பார்க்க விரும்புபவர்கள் ஜியோ சினிமா (Jio Cinema) ஆப்-பில் இலவசமாக கண்டுகளிக்கலாம்.
இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் 2023 போட்டிகள் அட்டவணை
போட்டி | தேதி | நாள் / கிழமை | இடம் | நேரம் |
முதலாவது ஒருநாள் போட்டி | செப்டம்பர் 22 | வெள்ளிக்கிழமை | மொஹாலி | பிற்பகல் 1:30 மணி |
2வது ஒருநாள் போட்டி | செப்டம்பர் 24 | ஞாயிற்றுக்கிழமை | இந்தூர் | பிற்பகல் 1:30 மணி |
3வது ஒருநாள் போட்டி | செப்டம்பர் 27 | புதன்கிழமை | ராஜ்கோட் | பிற்பகல் 1:30 மணி |
முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி
கே.எல் ராகுல் (கேப்டன்), ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா
3 வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஆர்.அஸ்வின்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.