Ind vs Aus, India vs Australia 2nd Test Score: நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மாறி மாறி கமாண்டிங் பொசிஷனை எடுத்துக் கொண்டன. ஆனால், அதில் ஆஸ்திரேலியா ஓரளவிற்கு அதிக வெற்றிப் பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது. முதல் விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்த பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும், லோ ஆர்டர் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்டின் Helpful அரைசதம்(58), ஷான் மார்ஷின் Valuable 45 ரன்கள், என நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய, இரண்டாம் நாள் ஆட்டத்தில், பேட் கம்மின்ஸ் இதுவரை எந்தவித சிரமும் இன்றி 56 பந்துகளை சந்தித்து இருக்கிறார். தொடர்ந்து பேட்டிங் செய்து கொண்டும் இருக்கிறார்.
இந்தியா, ஆஸ்திரேலியா நான்காம் நாள் ஆட்டத்தை லைவாக காண இங்கே க்ளிக் செய்யவும்
போட்டி ஆரம்பித்து அரைமணி நேரம் ஆகியும், இன்னும் ஒரு விக்கெட் கூட கிடைக்காதது சற்று ஏமாற்றமே!. அடுத்த விக்கெட்... கேப்டன் டிம் பெய்னை 38 ரன்னில் LBW ஆக்கினார் பும்ரா. 3 பந்துகளில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள். மிட்சல் ஸ்டார்க் அவுட்!. இஷாந்த் ஓவரில், கீப்பர் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்களில் வெளியேறினார். அதற்கு அடுத்த பந்திலேயே ஹேசில் வுட், கீப்பர் கேட்ச் ஆக, ஆஸ்திரேலியா 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சொந்த மண்ணில் முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் அடித்தும், ஆஸ்திரேலியா கடைசியாக தோற்ற போட்டி, 2008ல் நடந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த அப்போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றிருந்தது. இந்தப் போட்டியில் அப்படி தோற்க வாய்ப்புள்ளதா?. முரளி விஜய் விக்கெட்டை இழந்த பிறகு, லன்ச் முடித்து வந்திருக்கும் இந்திய அணி உஷாராக விளையாடும் என எதிர்பார்ப்போம். லோகேஷ் ராகுல், புஜாரா களத்தில். மற்றொரு தொடக்க வீரர் லோகேஷ் ராகுலை, ஹேசில்வுட் 2 ரன்னில் போல்டாக்கினார். தொடக்க ஓப்பனர்கள் இருவரும் போல்ட். புஜாரா 18 ரன்களுடனும், விராட் கோலி 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பொறுமையாக ஆடி வந்த புஜாரா, 103 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்தில் கேட்ச் ஆனார். 3 விக்கெட்டுக்கு, புஜாரா - கோலி கூட்டணி 74 சேர்த்து பிரிந்துள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக ஆடி அரைசதம் அடித்துள்ளார். புஜாரா அவுட்டான பிறகு களமிறங்கிய ரஹானே, கோலிக்கு பக்கபலமாக நின்று ஆடி வருகிறார். இன்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 82 ரன்களுடனும், ரஹானே 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
What does Day 2 have in store? #AUSvIND pic.twitter.com/lv9Qy4F27d
— BCCI (@BCCI) 15 December 2018
இந்திய அணி வீரர்கள் விவரம்: விராட் கோலி (C), லோகேஷ் ராகுல், முரளி விஜய், செத்தேஷ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே (WC), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (WK), இஷாந்த் ஷர்மா, மொஹம்மத் ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, உமேஷ் யாதவ்.
India vs Australia 2nd Test Day 2 Live Cricket Score Streaming: பரபரப்பான இப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை நமது இந்தியன்எக்ஸ்பிரஸ் தளத்தில் நீங்கள் காணலாம்.
03:15 PM - ஆட்ட நேர முடிவில் 172-3
இன்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 82 ரன்களுடனும், ரஹானே 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Stumps on Day 2 of the 2nd Test.
A solid 90-run partnership between @imVkohli and @ajinkyarahane88 as #TeamIndia end Day 2 on 172/3, trail Australia (326) by 154 runs.
Scorecard - https://t.co/kN8fhHfivo #AUSvIND pic.twitter.com/cJ6xp2yTLg
— BCCI (@BCCI) 15 December 2018
02:50 PM - கோலி அரைசதம்
இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக ஆடி அரைசதம் அடித்துள்ளார். புஜாரா அவுட்டான பிறகு களமிறங்கிய ரஹானே, கோலிக்கு பக்கபலமாக நின்று ஆடி வருகிறார்.
01:20 PM - புஜாரா அவுட்
பொறுமையாக ஆடி வந்த புஜாரா, 103 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்தில் கேட்ச் ஆனார். 3 விக்கெட்டுக்கு, புஜாரா - கோலி கூட்டணி 74 சேர்த்து பிரிந்துள்ளது.
12:20 PM - புஜாரா 18 ரன்களுடனும், விராட் கோலி 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
10:50 AM - லோகேஷ் ராகுல் அவுட்
மற்றொரு தொடக்க வீரர் லோகேஷ் ராகுலை, ஹேசில்வுட் 2 ரன்னில் போல்டாக்கினார். தொடக்க ஓப்பனர்கள் இருவரும் போல்ட்.
10:30 AM - லன்ச்சுக்கு பிறகு
முரளி விஜய் விக்கெட்டை இழந்த பிறகு, லன்ச் முடித்து வந்திருக்கும் இந்திய அணி உஷாராக விளையாடும் என எதிர்பார்ப்போம். லோகேஷ் ராகுல், புஜாரா களத்தில்...
10:10 AM - ஆஸ்திரேலியா 300
சொந்த மண்ணில் முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் அடித்தும், ஆஸ்திரேலியா கடைசியாக தோற்ற போட்டி, 2008ல் நடந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த அப்போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றிருந்தது. இந்தப் போட்டியில் அப்படி தோற்க வாய்ப்புள்ளதா?
The last time Australia lost a home Test after scoring 300+ in their first innings was the Boxing Day Test at the MCG against SA in 2008. #AUSvIND
09:55 AM - DAY 2 லன்ச்
உணவு இடைவேளையின் போது, இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்துள்ளது.
09:50 AM - அவுட்
முரளி விஜய், அபார இன் ஸ்விங் பந்தால் 0 பண்ணில் போல்டாக்கினார் மிட்சல் ஸ்டார்க். பேட்டுக்கும், பேடுக்கும் இடையேயான கேப்பில் நுழைந்த ரெட் பந்து, ஸ்டெப்புகளை காலி செய்தது.
09:35 AM - இந்திய பேட்ஸ்மேன்கள் தற்போது களத்தில்... லோகேஷ் ராகுல், முரளி விஜய்.
09:33 AM - ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஹாரிஸ் 70 ரன்களும், டிராவிஸ் ஹெட் 58 ரன்களும், ஃபின்ச் 50 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில், 20.3 ஓவர்கள் வீசிய இஷாந்த் 41 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா, உமேஷ், ஹனுமா விஹாரி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
09:23 AM - மிட்சல் ஸ்டார்க் அவுட்!. இஷாந்த் ஓவரில், கீப்பர் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்களில் வெளியேறினார். அதற்கு அடுத்த பந்திலேயே ஹேசில் வுட், கீப்பர் கேட்ச் ஆக, ஆஸ்திரேலியா 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
09:15 AM - 325 ரன்களை ஆஸ்திரேலியா கடந்துள்ளது. நேற்று முதல் நாளை விட, இன்று பந்துகள் அதிகளவில் பவுன்ஸ் ஆகின்றன. இது இந்தியா பேட்டிங் செய்யும் போது நிச்சயம் ஆபத்தாக அமையும்.
Considering that the tail is wagging consistently, nowadays, Indian bowlers must try and have more concentration of good length balls (as seen on left to top order batsman) and curb the excessive variation to lower order batsmen as seen on right.#sonysix pic.twitter.com/uNfDUsxFEx
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) 15 December 2018
09:05 AM - அடுத்த விக்கெட்... கேப்டன் டிம் பெய்னை 38 ரன்னில் LBW ஆக்கினார் பும்ரா. 3 பந்துகளில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள்.
09:00 AM - விக்கெட்... பேட் கம்மின்ஸ் அவுட். உமேஷ் யாதவ் ஓவரில், ஆஃப் ஸ்டெம்ப்புகள் சிதற 19 ரன்னில் வெளியேறினார் கம்மின்ஸ்.
08:44 AM - இந்தியா இந்த 2வது டெஸ்ட் போட்டியில் தோற்கும் என வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கூறுகிறார். அவர் சொன்னது போல தோற்குமா?
I said that Australia will win this game ???????? On a serious note...taller Aussie seamers...crack opening up already. India need a miracle to salvage this. Me feels. #ausvind #7cricket https://t.co/sRlpCAvNoM
— Aakash Chopra (@cricketaakash) 15 December 2018
08:37 AM - Tail-enders எப்படி பேட்டிங் செய்ய வேண்டும்? என்பதை ஆஸ்திரேலியா நமக்கு இம்முறையும் பாடம் எடுத்து வருகிறது. பேட் கம்மின்ஸ் இதுவரை எந்தவித சிரமும் இன்றி 56 பந்துகளை சந்தித்து இருக்கிறார். தொடர்ந்து பேட்டிங் செய்து கொண்டும் இருக்கிறார். போட்டி ஆரம்பித்து அரைமணி நேரம் ஆகியும், இன்னும் ஒரு விக்கெட் கூட கிடைக்காதது சற்று ஏமாற்றமே!.
08:27 AM - இஷாந்த் ஓவரில், கம்மின்ஸ்-க்கு LBW கேட்கப்பட்டது. ஆனால், பந்து லெக் ஸ்டெம்பிற்கு மேலே சென்றதால், விக்கெட் கிடைக்கவில்லை. நல்ல Inswing பந்து அது.
08:22 AM - ஷமியின் Bounce அட்டாக்குகள் நம்மை வாவ் சொல்ல வைக்கின்றன. விரைவில், அவரது பவுன்ஸ் வேட்டையில் ஒருவர் சிக்குவார் என்பதை உறுதியாக சொல்லலாம். அது, டிம் பெய்னாக இருந்தால் கூடுதல் மகிழ்ச்சி
08:10 AM - இஷாந்த் ஷர்மா ஓவரில், நல்ல ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டார் லோகேஷ் ராகுல். இந்த ரன் அவுட்டிற்காகவே அவர் பேட்டிங் செய்கையில் இன்று சதம் அடிக்க வேண்டும்.
08:00 AM - பெர்த்தில், நேற்றைவிட இன்று குளிர் அதிகம் நிலவுகிறது. பிட்சில் உயிர் புற்கள் அதிகம் காணமுடிகிறது. நேற்று, மாலை முதலே பந்துகள் அதிகம் பவுன்ஸ் ஆகத் தொடங்கியது. ஆகவே, இன்று இந்திய பவுலர்கள் அதிகம் பவுன்ஸ் பந்துகள் கொண்டு, ஆஸ்திரேலியாவை அச்சுறுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
This pitch has quickened up...three fielders patrolling the fence for Shami and all of them are behind square. Validates the point. #ausvind #7cricket @7Cricket @1116sen
— Aakash Chopra (@cricketaakash) 15 December 2018
07:50 AM - இதோ, இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. கையில் பந்துடன் ஷமி, ஸ்டிரைக்கில் Bat-உடன் டிம் பெய்ன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.