9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Australia Semi-Final, Champions Trophy 2025: IND vs AUS Weather update, predicted XI, squads and other details
இந்நிலையில், நாளை செவ்வாய்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரைஇறுதியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அதேநேரத்தில், பாகிஸ்தானின் லாகூரில் நாளை மறுநாள் புதன்கிழமை நடைபெறும் இரண்டாவது அரைஇறுதியில் நியூசிலாந்து தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
இந்தியா vs ஆஸ்திரேலியா மோதல் எப்போது, எங்கு நடக்கிறது?
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் மதியம் 2 மணிக்கு போடப்படும். இப்போட்டியானது துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் நெட்வொர்க் 18 சேனல்களில் போட்டி ஒளிபரப்பப்படும். இந்தப் போட்டியை ஜியோஹாட்ஸ்டாரில் லைவ்ஸ்ட்ரீம் மூலம் பார்க்கலாம்.
இந்தியா vs ஆஸ்திரேலியா - நேருக்கு நேர்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 151 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 84 போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்தியா 57போட்டிகளில் வென்றுள்ளது. 10 போட்டிகளுக்கு முடிவு இல்லை.
இந்தியா vs ஆஸ்திரேலியா - துபாய் பிட்ச் எப்படி?
துபாயில் உள்ள ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதனால், பாகிஸ்தானைப் போல் இங்கு பேட்ஸ்மேன்களால் இங்கு அதிக ரன்களை குவிக்க முடியவில்லை. குறிப்பாக பந்து பழையதாகி, ஸ்லோயர் பந்துகளை திறமையாக இயக்கக்கூடிய ட்வீக்கர்கள் மற்றும் சீமர்களுக்கு எதிராக அதிரடியாக பேட்டிங் செய்வது கடினமாகிவிட்டது.
எனவே, முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் அதிரடியாக அடித்து ஆடுவதுடன் சாதுரியமாக பந்துவீசு வேண்டும். வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் துபாயில் விளையாடி முதலில் பேட்டிங் செய்தபோது தோல்வியுற்றன. அதிலிருந்து அணிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தியா vs ஆஸ்திரேலியா - துபாயில் மழை பெய்யுமா?
நாளை செவ்வாய் கிழமைக்கான துபாயின் வானிலை முன்னறிவிப்பின் படி, பிரகாசமான நாளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் அதனால், இது இரு அணிகளுக்கும் சிறந்த விளையாடும் சூழ்நிலையை வழங்கும்.
இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், வருண் சகரவர்த்தி.
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், கூப்பர் கொனொலி, ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்), மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, க்ளென் மேக்ஸ்வெல், ஸ்பென்சர் ஜான்சன், பென் ட்வார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் முழு அணி வீரர்கள் பட்டியல்:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, அருண் சக்ரவர்த்தி.
ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, பென் ட்வார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுஷாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், டான்வெடம் ஸ்வாம்பாங், டான்வெடம் சாம்பாங்.