ind vs aus, aus vs ind, ind vs aus test series, aus vs india test series, cricket news, இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் செய்திகள், டெஸ்ட் போட்டிகள், விளையாட்டு செய்திகள்
'பொறுத்தது போதும் முருகேசா பொங்கி எழு' என்பது போல களமிறங்கிவிட்டது ஆஸி., கிரிக்கெட் நிர்வாகம்.கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு அறிவித்து டங்குவாரு அறுந்து நாக்கு தள்ளிப் போய் இருக்கின்றன.
Advertisment
தொழில் இன்றி, வருமானம் இன்றி ஒவ்வொரு துறையும் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன. பல முன்னணி நிறுவனங்கள் பகிரங்கமாக பணியாளர்களை நீக்கி வருகின்றன. சோற்றுக்கே அல்லல்படும் சூழல் உருவாகியுள்ளது.
விளையாட்டு உலகமும் இந்த சரிவில் இருந்து தப்பவில்லை. மக்களுக்கு வாழ்வதற்கே ஆதாரம் இல்லாத நிலையில், பொழுதுபோக்கிற்கு எங்கிருந்து முக்கியத்துவம் தருவது.
Advertisment
Advertisements
எனினும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இந்த விஷயங்களை எல்லாம் தூர வைத்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
அதாவது, அடுத்தடுத்து தங்கள் அணி விளையாட உள்ள கிரிக்கெட் தொடர்களை ஆஸி., நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில், இந்திய தொடரும் இடம் பெற்றுள்ளது. புகழ்பெற்ற பார்டர்-கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடருக்கான 4 மைதானங்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் அதிவேக ஆடுகளமான பெர்த் இம்முறை இடம்பெறவில்லை.
டிசம்பர் 3-7 முதல் டெஸ்ட் பிரிஸ்பன்
டிசம்பர் 11-15 -2வது டெஸ்ட் (பகலிரவு டெஸ்ட்) -அடிலெய்ட்
டிசமர் 26-30 -3வது டெஸ்ட் (பாக்சிங் டே) - மெல்போர்ன்
ஜனவரி 3-7 -4வது இறுதி டெஸ்ட் - சிட்னி.
முன்னதாக 4 டெஸ்ட்களையும் ஒரே மைதானத்தில் ஆடுவதாகத் திட்டமிடப்பட்டது, அது தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இந்திய அணிக்கு முன்பாக ஆப்கான் அணியுடன் ஆஸ்திரேலிய அணி நவம்பர் 21-25-ல் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. இதுவும் பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டியாகும்.
கொரோனா காரணமாக போட்டியை ரசிகர்கள் நேரடியாக பார்க்க வாய்ப்பில்லை. எனினும், ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil