India vs Australia 1st T20 Live Cricket Score: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையே இன்று நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா கடைசி பந்தில் த்ரில் வெற்றிப் பெற்றது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. மே மாதம் இங்கிலாந்தில் தொடங்கவுள்ள உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக, இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச தொடர் இதுவாகும். இதனால், இந்த சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.
இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ஆர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 19.5வது ஓவரில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
Aus vs Ind 1st T20: இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் டி20
10:15 PM - கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 5 பந்துகளில் 12 ரன்கள் அடிக்கப்பட்டது. ஆனால், கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
10:10 PM - 19 ஓவரை வீசிய பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
08:33 PM - முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக 36 பந்துகளில் லோகேஷ் ராகுல் 50 ரன்கள் எடுத்தார்.
06:35 PM - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறக்கப்படுகிறார். அதேபோல், விஜய் ஷங்கருக்கு மாயன்க் மார்கண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.