India-vs-australia: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அண்மையில் இந்திய மண்ணில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் கணுக்கால் காயம் காரணமாக ஓய்வு எடுத்து வரும் ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. இதேபோல் சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் படை களம் இறங்க உள்ளது. அவர்கள் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை சமாளிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மறுபுறம், ஆஸ்திரேலிய அணியில் மூத்த தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ் உட்பட உலகக் கோப்பை வென்ற அணியிலிருந்து சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 7 வீரர்கள் இந்த தொடருக்கான டி20 அணியில் இடம்பெற்றுள்ளனர். மேத்யூ வேட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டி20 தொடர் அட்டவணை:
நவம்பர் 23 ஆம் தேதி தொடங்கும் டி20 தொடர் விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கவுகாத்தி, நாக்பூர் மற்றும் ஐதராபாத் ஆகிய ஐந்து மைதானங்களில் நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டிக்கான தேதிகள் மற்றும் இடங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
இந்தியா vs ஆஸ்திரேலியா 1வது டி20: விசாகப்பட்டிம்
இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது டி20: நவம்பர் 26 திருவனந்தபுரம்
இந்தியா - ஆஸ்திரேலியா 3வது டி20: நவம்பர் 28ம் தேதி கவுகாத்தி
இந்தியா - ஆஸ்திரேலியா 4வது டி20: டிசம்பர் 1ம் தேதி நாக்பூர்
இந்தியா - ஆஸ்திரேலியா 5வது டி20: டிசம்பர் 3ம் தேதி ஐதராபாத்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டி20 தொடர்: ஆன்லைனில் லைவ் பார்ப்பது எப்படி?
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடர் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் கலர்ஸ் சினிப்ளெக்ஸ் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. அதே நேரத்தில் போட்டியை நேரலை ஸ்ட்ரீம் ஜியோசினிமா ஆப் மற்றும் இணையதளத்தில் பார்க்கலாம். அனைத்து போட்டிகளும் இரவு 7 மணி முதல் தொடங்குகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டி20 தொடர் - இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்
இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார்.
ஆஸ்திரேலியா அணி:
மேத்யூ வேட் (கேப்டன்), ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரென்டார்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பாட்சன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.