ஜூனியர் உலக கோப்பை : இந்தியாவிற்கு 217 ரன்கள் இலக்கு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, யுவராஜ் சிங், சேவாக் போன்றோர் ஜூனியர் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு தங்களின் வாழ்த்துக்களை...

நியூசிலாந்தில் நடைப்பெற்று வரும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், கோப்பையை வெல்ல இந்தியாவிற்கு 217 ரன்கள் இலக்காக நிர்ணிக்கப்பட்டுள்ளன.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியுடன் பலபரீட்டை நடத்தி வருகிறது. நியூசிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் அரங்கத்தில் குவிந்து உள்ளனர்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணி, இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜோனாத்தன் மெர்லோ (79) ரன்கள் எடுத்தார். இந்திய அணியைச் சேர்ந்த இஷான் போரல், சிவா சிங், கம்லேஷ் நக்ரோட்டி ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் திணறினர்.

இறுதியில், ஆஸ்திரேலியா அணி 47.2 ஓவர் முடிவில் 216 ரன்களை எடுத்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 217 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி, இந்திய அணி 18 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களை எடுத்துள்ளது. மனோஜ்ட் அரை சதத்தை எட்டியுள்ளார்.

இந்திய அணி இம்முறை கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, யுவராஜ் சிங், சேவாக் போன்றோர் ஜூனியர் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

×Close
×Close