Advertisment

மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வரலாற்று வெற்றி!

ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
 Womens Test IND secures historic win

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

india-vs-australia | மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று (டிச.24) நடந்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் தொடர்ந்து ஆட்டமிழந்தனர்.

Advertisment

அந்த அணி, 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியாவில் அதிகப்பட்சமாக தஹிலா மெக்ராத் 50 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்திய அணியின் பூஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து களம் கண்ட இந்திய வீராங்கனைகள் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

இறுதியில் இந்திய அணி 406 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 261 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதையடுத்து 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டிப் பிடித்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

India Vs Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment