Advertisment

இந்தியா vs ஆஸ்திரேலியா உலககோப்பை இறுதிப்போட்டி : கடற்கரையில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு

அகமதாபாத் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ள உலககோப்பை இறுதிப்போட்டியை தமிழகத்தில் கடற்கரையில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
Nov 19, 2023 08:15 IST
New Update
India vs Australia 2023 World Cup Final

2023 உலககோப்பை இறுதிப்போட்டி : இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2023-ம் உலகோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டியை கடற்கரையில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

2023-ம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா தென்ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இதில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதுிப்போட்டிக்கு முன்னேறியது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது அரையிறுதிபோட்டியில் தென்ஆப்பிரிக்க அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டியை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியை நேரில் பார்க்கவும், தொலைக்காட்சிகளில் கண்டு ரசிக்கவும் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக சென்னையில் மேரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் கடந்த 2003-ம் ஆண்டு நடந்த உலககோப்பை தொடரில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்து கோப்பை வெல்லும் வாய்பபை தவறிவிட்டது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று 3-வது முறையாக உலககோப்பை வெல்லும் என்று இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#India Vs Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment