Ind vs Ban 1st Test Day 2 Live : ‘ஷேவாக் எஸ்க்’ இரட்டை சதம் விளாசிய மாயங்க் அகர்வால்

India vs Bangladesh test cricket : இந்தியா, வங்கதேசம் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது

Ind vs Ban 1st Test Day 2 Live
Ind vs Ban 1st Test Day 2 Live

Ind vs Ban 1st Test Day 2 Live Score Card : இந்தியா, வங்கதேசம் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

இந்தியா வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இந்த தொடரில், முதல் போட்டியில், வங்கதேசம் வெற்றி பெற்ற நிலையில், மற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

சர்வதேச டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, 9வது இடத்தில் உள்ள வங்கதேச அணியுடன் மோத உள்ளது. டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டி இந்தூர் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

வங்கதேச நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன் இல்லாதநிலையில், இளம்வீரர் மோமிநுல் ஹேக் கேப்டன் பதவியை ஏற்றுள்ளார்.

இந்திய அணியில் குல்தீ்ப் யாதவ், மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 3 சீமர்களுடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது.

ரோகித் ஏமாற்றம் : பின்னர் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா, ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் சேர்த்தது. ரோஹித் சர்மா 6 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மயங்க் அகர்வால் 37 ரன்களுடனும், புஜாரா 43 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள்.

இந்திய பவுலர்களின் ஆக்ரோஷ பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல், 150 ரன்களுக்கு வங்கதேச அணி ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் முகம்மது ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

Ind vs Ban Day 2 Live Updates

இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தில், சிறப்பாக விளையாடிய மாயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து வங்கதேசத்தை வியர்க்க வைத்தார். ரஹானே 86 ரன்களில் ஆட்டமிழந்து, தனது சதம் வாய்ப்பை நழுவவிட்டார்.


குறைந்த இன்னிங்ஸில் இரண்டு இரட்டை சதம் அடித்தவர்கள்:

5 – வினோத் காம்ப்ளி V Kambli
12 – மாயங்க் அகர்வால்
13 – டான் பிராட்மேன்
14 – ரோவ்
15 – கிரேம் ஸ்மித்
16 – ஹேம்மன்ட்
18 – புஜாரா

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச் டி சேனலில் போட்டியை நேரடியாக காணலாம். ஆன்லைனில் ஹாட் ஸ்டாரில் போட்டியைக் காணலாம். தவிர, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India vs bangladesh 1st test day 1 live cricket score updates virat kohli indian team

Next Story
ரொம்ப பொல்லாதவன்யா இந்த பொலார்ட் : எப்படியெல்லாம் யோசிக்கிறான் பாரு…..kieron pollard, kieron pollard no ball, umpire ahmed shah dhurrani, afghanistan vs west indies 3rd odi, afg vs wi 3rd odi, west indies vs afghanistan 3rd odi, asfghar afghan, kieron pollard funny
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com